இந்தியன் ரயிலின் முக்கிய விதிமுறை: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும். அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது நாம் இந்திய ரயில்வேயின் (INDIAN RAILWAY RULES) ஒரு முக்கியமான விதியைப் பற்றி தான் காணப் போகிறோம். இதன் மூலம் நீங்கள் பயங்கரமாக பயன் ஆடைவீர்கள். 


முன்பெல்லாம், காலி இருக்கைகள் குறித்த தகவல்களை பெற பயணிகள், ரயிலில் டிக்கெட் கவுண்டரை நாடுவார்கள். ஆனால் இப்போது, ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல் அறிய நீங்கள் உங்களது மொபைல் போன் மூலமே எளிமையாக தெரிந்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் IRCTC செயலிலோ அல்லது இணையதளத்திலோ உள்நுழைய அதாவது லாகின் செய்ய வேண்டியதில்லை. சாதரணமாகவே அதன் இணைப்பைக் கிளிக் செய்தால், ரயிலில் எந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்பதை நீங்கள் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | senior citizens: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் செய்தி: வருமான வரியே செலுத்த வேண்டாம்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ


இருக்கையை எப்படி தேர்ந்தெடுப்பது?
இந்நிலையில் இப்போது விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய, ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூவ  இணையதளமான https://www.irctc.co.in/ அல்லது இந்தியன் ரயில்வே ஆப்ஸ் (Indian Railway App) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, அதில் ​​இருக்கை முன்னுரிமையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், உங்களின் வயதுக்கு ஏற்ப மட்டுமே உங்களுக்கு இருக்கை அல்லாட் செய்யப்படும். 


இருக்கை ஒதுக்கீட்டில் விதிகள் என்ன?
இந்தியன் ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகளும், இரண்டு கீழ் பெர்த்துகள் மேலும் இரண்டு மிடில் பெர்த்ததுகள், தர்ட் ஏசியில் 2 இருக்கைகள், தர்ட் ஏசி எகானமியில் 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


* இதில் கரிப் ரத் ரயிலில் இரண்டு கீழ் இருக்கைகளும், இரண்டு மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 
* சீனியர் சிட்டிசன்களுக்கு (ஆண்கள் 60, பெண்கள் 58) கேட்காமலே லோயர் பெர்த்களை வழங்குகிறது. அதன்படி ஸ்லீப்பர் வகுப்பில் ஆறு முதல் ஏழு லோயர் பெர்த்களும், தர்ட் ஏசியில் நான்கு முதல் ஐந்து லோயர் பெர்த்களும், செகண்ட் ஏசியில் மூன்று  முதல் நான்கு லோயர் பெர்த்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
* கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரயிலில் லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கும்  ரயிலில் லோயர் பெர்த் (Lower Birth) ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.


எனவே இனி ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன் இந்தியன் ரயில்வேவின் விதிமுறைகள் பற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்ளவும்.


மேலும் படிக்க | Education, SJSGC: வீட்டிற்கு ஒரு பெண்ணுக்கு மட்டும் மாதம் 35000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ