தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..
Anger Mantra : நம்மில் பலருக்கு தொட்டவுடன் அனைத்திற்கும் கோபம் வரும். அப்போதெல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Anger Mantra : மனிதராக பிறந்த அனைவருக்குமே சோகம், மகிழ்ச்சி, துக்கம், கோபம், பேரானந்தம் உள்ளிட்ட பல உணர்வுகள் இருக்கும். இதை, அவ்வப்பாது நாம் உணரவில்லை என்றால் கண்டிப்பாக நாம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்வோம். ஆனால் ஒரு சிலருக்கு, சும்மாவே அளவுக்கு மீறி கோபம் வரும். அப்போமேல்லாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மனதிற்குள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
“இதுவும் கடந்து போகும்” என்ற மந்திரம் அனைத்து நேரங்களிலும் உபயோகப்படுத்தக்கூடியதாகும். மேலும், “நான் அமைதியான மனிதன். என் மனதிற்குள் அமைதி நிலவுகிறது” என்பதை மனதிற்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.
மூச்சுப்பயிற்சி:
உங்களுக்கு கோபம் வருவது போல் தோன்றினால், உடனே மூச்சுப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட வேண்டும். இது உங்களது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி, அளவுக்கு அதிகமாக இருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும்.
10 வரை எண்ண வேண்டும்:
கோபம் வரும் போது, 1 முதல் 10 வரை எண்ண வேண்டும். கோபம் குறையும் வரை, இப்படி 10 வரை எண்ணவும். இந்த அமைதி நமது மூளை கோபத்தில் செயல்படுவதை தவிர்க்கும். இது போன்ற சமயங்களில், அந்த கோபத்தை விடுத்து யோசிக்க வேண்டும்.
நினைவாற்றல் பயிற்சி:
அதிகமாக கோபம் வரும் போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்தில் எப்படி இருக்கிறீர்கள், என்னவாக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுகுள் இருக்கும் கோபம் வெடித்தால், அந்த இடத்தில் என்ன நிகழும் என்று யோசித்து பார்க்க வேண்டும். இது, உங்களுக்கு பொறுமையாக ரியாக்ட் செய்ய உதவும்.
உங்கள் சூழலை மாற்றவும்:
ஒரே மாதிரியான சூழலில், ஒரே மாதிரியான மனிதர்கள் உங்களை கோபப்படுத்துகிறார்கள் என்றால், அந்த இடத்தில் இருந்து எப்படி நகர வேண்டும், அந்த மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என யோசிக்க வேண்டும். கோபமான அந்த சூழலில் இருந்து வேறு ஒரு அறைக்கு செல்வது, கோபத்திற்கு காரணமான நபரிடம் இருந்து விலகியிருத்தல் ஆகியவை உங்கள் மனநிலையை சரிசெய்ய உதவும்.
உடலுக்கு வேலை:
கோபம் தலைக்கு ஏறும் போது, எங்காவது வேகமாக நடந்து செல்வது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது உள்ளிட்டவை கோபத்தை குறைக்க உதவும். கோபத்தில் இருக்கும் போது உடலில் இருக்கும் டென்ஷனை குறைக்க, வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யலாம்.
மேலும் படிக்க | காதலன் கடுப்பேத்துகிறாரா... சண்டை வேண்டாம் - பெண்களே இதை செய்யுங்கள்!
ரிலாக்ஸ் ஆக வழிகள்:
கோபப்படும் போது, நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய சில வழிகள் இருகின்றன. உங்களுக்குள் நீங்களே உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இடத்தை நினைத்து பார்க்கலாம். உங்களுக்கு பிடித்தவர்கள் குறித்து நினைத்து பார்க்கலாம். கொஞ்ச நேரம் கண்களை மூடி, நீங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இடத்திற்கு சென்று விட்டதாக உணரலாம்.
தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள், பிரச்சனைகள் அல்ல:
உங்களை கோபப்படுத்தியதைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, அதற்கு ஒரு தீர்மானத்தைக் கண்டுபிடிப்பதில் உங்கள் கவனத்தை திசை திருப்பவும். இது, நிலைமையை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற கோபம் எழாமல் தவிர்க்கவும் உதவும்.
மேலும் படிக்க | அதிகமாக கோபம் வருகிறதா? ஆபத்து உங்களுக்கு தான்! கட்டுப்படுத்துவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ