இன்றைய காலக்கட்டத்தில் வேகமான வாழ்க்கை முறையில் சிறிய விஷயங்களுக்கு கூட சிலர் அதிகம் கோபப்படுகின்றனர். இந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாததால் பலவற்றை இழக்கின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில், மற்ற நபர்கள் சொல்லும் அறிவுரைகள் காதில் ஏறாது. மேலும் கோவத்தில் சில வார்த்தைகளை தவறாக பேசுவதால் மற்றவர்களையும் காயப்படுத்துகிறோம். இதனால் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதிகம் கோபப்படுவது உடல்நலத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கோபம் வருவது இயற்கையான ஒன்றாக இருந்தாலும் அழுத்தம் காரணமாக கூட சில சமயங்களில் கோவம் வரும். அதிக மன அழுத்தம் கோபத்திற்கு முதன்மை காரணமாக அமைகிறது. எனவே முதலில் மனஅழுத்தத்தை எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை பாதிக்கும்... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!
மனஅழுத்தம் வேலையில், குடும்பத்தில் அல்லது தெரிந்தவர்களின் மூலம் வரலாம். ஒருவரின் வார்த்தைகளால் கூட மனஅழுத்தம் ஏற்பட்டு கோபப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதிக கோபம் ஒருவரை பைத்தியமாக்கும். அந்த சமயத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த கோபத்தை கட்டுப்படுத்தும் சில நுட்பங்களை பின்பற்றலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி எப்படி அமைதியான முறையில் இருப்பது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உடற்பயிற்சி: கோவத்தை கட்டுப்படுத்துவதில் எளிதான ஒன்று உடற்பயிற்சி ஆகும். நல்ல உடல் செயல்பாடு ஒவ்வொருவரையும் மன அழுத்தத்திலிருந்தும் விடுவிக்கும். அதேபோல், கோபத்தை நிர்வகிப்பதற்கும் இது ஒரு சிறந்த வழியாக உள்ளது. அதிக கோவம் அல்லது மன அழுத்தம் இருந்தால் உடனடியாக சிறிது உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது இதனை கட்டுப்படுத்தும்.
மன அழுத்தம்: எதற்கெடுத்தாலும் கோவம் வரும் பழக்கம் இருந்தால் மன அழுத்தம் தான் முதன்மை காரணமாக இருக்கும். எனவே முதலில் உங்கள் மன அழுத்தத்தை குறைப்பது பற்றி சிந்திக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த யோகா, தியானம், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவற்றைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியாகி கோவம் மற்றும் மனஅழுத்தம் கட்டுக்குள் வரும்.
கோபம்: அதிக கோவம் வந்தால் அதனை மனதிற்குள் வைக்காமல் கோபத்தை வெளிப்படுத்துங்கள். எப்போதும் கோவத்தை அடக்கி வைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. எனவே, கோவம் வரும் போது யாரிடமாவது பேசுங்கள் அல்லது தனியாக சென்று சத்தமாக கத்துங்கள். இதனால் மனஅழுத்தம் குறைந்து கோவத்தை கட்டுப்படுத்த முடியும்.
ஸ்ட்ரெஸ் பால்: வேலை பார்க்கும் இடங்களில் கோவம் வந்தால் உடனே அங்கிருந்து எழுந்து செல்ல முடியாது. எனவே கோவத்தை கட்டுப்படுத்த ஸ்ட்ரெஸ் பால் உதவியைப் பெறலாம். கோவம் வரும் போதெல்லாம் இந்த பந்தை கைகளால் அழுத்தினால் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தலாம்.
மூச்சு பயிற்சி: அடக்கமுடியாத கோவம் வரும்போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஆழமான மூச்சு பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் கோவம் தானாக குறையும். கோபம் என்பது இயற்கையாக வரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கட்டுப்படுத்துவது நமது கைகளில் உள்ளது.
மேலும் படிக்க | இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ