வீட்டுக்கடன் எளிதில் பெற இந்த முறையை பாலோ பண்ணுங்க!
கடன் வழங்க வங்கி முடிவு செய்த பின்னர் கடன் வாங்குபவருக்கு கடன் தொகை, வட்டி, கடன் காலம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பும்.
சொந்தமாக ஒரு வீட்டை கட்ட வேண்டுமென்றாலோ அல்லது புதிதாக ஒரு வீட்டை வாங்க வேண்டுமென்றாலோ அதற்கு அதிகம் செலவாகும். நம் கையில் அதற்கான தொகை இருந்துவிட்டால் எவ்வித பிரச்னையும் இல்லை, ஆனால் பணம் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் பலரின் சொந்த வீட்டுக்கான கனவை நிறைவேற்றுவது வீட்டுக்கடன் தான். வீட்டுக்கடன் பெற விண்ணப்பிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன, அதனை நீங்கள் பின்பற்றி விண்ணப்பிப்பதன் மூலம் எளிமையாக வீட்டுக்கடன் பெற்று உங்கள் சொந்த வீட்டின் கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம். இப்போது வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகளை பற்றி இங்கே காண்போம். வீட்டுக் கடன் பெறுவதற்கு முதலில் விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை நிரப்பி தேவையான ஆவணங்களை அதனுடன் இணைக்க வேண்டும்.
மேலும் படிக்க | Google Pay-ல் நெட்ஒர்க் பிரச்சனையா? இத பண்ணுங்க போதும்!
வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, கடன் வாங்குபவர் தனது தனிப்பட்ட தகவல்களான பெயர், முகவரி, தொலைபேசி எண், அடையாளச் சான்று, வருமான விவரங்கள், கல்வித் தகுதி, வேலை மற்றும் சொத்து மதிப்பு போன்ற முக்கியமான ஆவணங்களை வழங்க வேண்டும். உங்களது கடனுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் உங்களது கடன் கணக்கை பராமரிக்க ப்ராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ப்ராசஸிங் கட்டணம் 0.25 முதல் 0.50 சதவீதம் வரை வங்கிகளை பொறுத்து மாறுபடும். அதன்பின்னர் நீங்கள் கொடுத்த முகவரி, வேலை மற்றும் பல விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் சரிபார்ப்பு நடத்தப்படும்.
சரிபார்ப்புக்குப் பிறகு விண்ணப்பத்தின் தகுதிக்கு ஏற்ப கடன் தொகை அனுமதிக்கப்படும், கடனை வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட வங்கியானது கடன் வாங்குபவரின் பின்னணி, வங்கி பரிவர்த்தனைகள், வருமானம், வேலை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் போன்ற பலவற்றை சரிபார்க்கும், இவற்றில் ஏதேனும் சரியில்லை என்றால் உங்கள் கடனை வங்கி ரத்தும் செய்யலாம். கடன் வழங்க வங்கி முடிவு செய்த பின்னர் கடன் வாங்குபவருக்கு கடன் தொகை, வட்டி, கடன் காலம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பும். கடன் வாங்குபவர் வீட்டுக் கடனுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் மற்றும் 36 மாதங்களுக்கு பின் தேதியிட்ட செக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது உண்மையான சொத்து ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இந்த செயல்முறை சட்டபூர்வமாக முடிக்கப்பட்ட பிறகு கடன் தொகை காசோலை மூலம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | மகிழ்ச்சி... சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ