Tiips To Overcome Laziness : நம் வாழ்வில், ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தாலே வாழ்க்கையே மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா? சோம்பேறித்தனம் என்பது, நம்மில் பலருக்கு ரத்தத்தோடு ரத்தமாக ஊறியதாக இருக்கிறது. இதற்கு காரணம், நமது வாழ்வியல் முறைகளை நாம் மாற்றிக்கொள்ளாமல் இருப்பதுதான் என சிலர் கூறுகின்றனர். சரி, வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தினால் சோம்பேறி தனத்தில் இருந்து மீளலாம். அது என்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோம்பேறித்தனத்தை ஒழித்துக்கொட்ட முதலில் நமக்கு தேவையானது, சரியான தூக்கம் ஆகும். இதை சரியாக செய்தாலே நல்ல தூக்கமும் கூடவே சேர்ந்து வரும். 


பாசிடிவான பேச்சு:


சோம்பேறித்தனத்தின் அடித்தளம், நமக்குள் நாமே நெகடிவாக பேசிக்கொள்வதுதான். உங்களை நீங்களே பைத்தியம் என்று கூறிக்கொள்வது, உங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிக்கொள்வது, உங்களை இன்னும் நீங்களே கீழே தள்ளிக்கொள்ளதான் உதவும். எனவே, உங்களுக்குள் நீங்கள் பாசிடிவாக பேச வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.


உங்களுக்கு நீங்களே பரிசு கொடுத்துக்கொள்வது:


சோம்பேறித்தனத்தினால் நமக்கு பிடித்த பல விஷயங்களை நாம் செய்து கொள்ளாமல் இருப்போம். எனவே, உங்களுக்கு பிடித்த நபர்களுடன் நேரம் செலவிடுவது, உங்களுக்கு பிடித்த பொருட்களை தேடிச்சென்று அதை வாங்குவது, பிடித்த இடங்களுக்கு சென்று மகிழ்ச்சிக்கொள்வது போன்றவை உங்கள் சோம்பேறித்தனத்தை களைய உதவலாம். 


பலத்தை உபயோகியுங்கள்:


உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒரு சவாலை எதிர்கொள்ளும் போது, உங்களிடம் பலமாக இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். இது, உங்களுக்குள் பாசிடிவ் எனர்ஜிக்களை மேன்மை படுத்த உதவும். மேலும், நீங்கள் செய்யும் வேலைகளில் உங்களுக்கு அதிகமான ஈடுபாடு ஏற்படவும் உதவும். 


மேலும் படிக்க | இந்த 4 விஷயங்களை செய்தால் ஒவ்வொரு நாள் அதிகாலையும் மகிழ்ச்சியாக விடியும்..!


திட்டமிடுதல்:


ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி ஓடும் போது, சரியான ஓடுதளம் இருந்தால்தான் அதில் நீங்கள் ஓட முடியும். எனவே, இலக்குகளை அடைவதற்கு சரியான திட்டமிடுதலை வைத்திருத்தல் வேண்டும். இது, உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளவும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்ளவும் உதவும். 


கவனச்சிதறல்களை தவிர்க்க வேண்டும்:


நீங்கள் ஒரு விஷயத்தை அதீத கவனம் கொடுத்து செய்து கொண்டிருக்கும் போதுதான், அந்த கவனத்தை சிதைக்கும் வகையில் ஏதேனும் ஒரு விஷயம் நடக்கும். எனவே, முக்கிய வேலைகளை செய்யும் போது செல்போன், லேப்டாப் அல்லது உங்களது கவனத்தை கெடுக்கும் எந்த விஷயத்தையும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம். 


காலையில் செய்ய வேண்டியவை:


  • காலையில் சீக்கிரமாக எழுவது, உங்கள் சோம்பேறித்தனத்திற்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைக்க உதவும். அனைவருக்கும் முன்னர் உங்கள் நாளை தொடங்குவது உங்களுக்கு ஒரு வித ஊக்கத்தை தருவதோடு, உடல் ஆற்றலையும் அதிகரிக்கும். 

  • காலையில் எழுந்தவுடன் படுக்கையிலேயே பல நிமிடங்கள் படுத்திருக்காமல், உடனே எழுந்து உங்கள் காலை கடன்களை முடிக்க வேண்டும். இது, உங்களை நாள் முழுவதும் ஆக்டிவாக வைத்திருக்க உதவும். 

  • முதல் வேளையாக, உங்கள் உடலுக்கு வேலை கொடுப்பது மிகவும் அவசியம் ஆகும். இது, உங்கள் மனநிலையை அந்த நாளுக்காக தயார் படுத்துவதுடன் உங்களை உடலில் இருக்கும் சோம்பேறி தனத்தை களைக்கவும் உதவுகிறது. 

  • சரியான காலை உணவை எடுத்துக்க்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஹெல்தியான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, வயிறு நிரம்ப சாப்பிடாமல் தேவையான அளவு சாப்பிட்டாலே உங்கள் நாள் இனிமையாக ஆரம்பிக்கும். 


மேலும் படிக்க | ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ