ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!

Healthy Morning Habits : நம் அனைவருக்குமே, அனைத்து நாட்களும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி, உங்கள் நாளை தினமும் மகிழ்ச்சியாக தினமும் காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2024, 04:02 PM IST
  • ஒவ்வொரு நாளையும் அழகாக்க டிப்ஸ்!
  • தினமும் காலையில் செய்ய வேண்டியவை..
  • என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்! title=

Healthy Morning Habits : உங்கள் நாள், சிறப்பானதாக அமைய தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள். என்னென்ன தெரியுமா?

நல்ல தூக்கம்:

நன்றாக தூக்கம் இல்லை என்றாலே அன்றைய நாளே சரியாக செல்லாதது போல இருக்கும். எனவே, தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது, உங்கள் மனநிலையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

அலாரம்:

நம்மில் பலர், அலாரம் வைத்து தூங்குவோம். ஒரு சிலர், அலாரம் அடிக்கும் போது ஆஃப் செய்து விட்டு தூங்குவோம். ஒரு சிலர் இரண்டு அல்லது மூன்று அலாரம் வைத்து தூங்குவோம். இப்படி செய்யாமல், ஒரே அலாரத்தில் எழுந்து கொள்ள உங்கள் உடலை தயார் படுத்திக்கொள்ளுங்கள். 

தண்ணீர் அவசியம்!

தினமும் காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காஃபி அல்லது டீ குடிக்க வேண்டும் போல இருக்கும். ஆனால், நாம் முதலில் குடிக்க வேண்டியது தண்ணீரைத்தான். இதனால் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதுடன் நினைவு திறனும் நன்றாக செயல்படுமாம்.

பட்டியல் தயார் செய்யுங்கள்:

உங்கள் நாள் எப்படி இருக்க போகிறது என்பதை, நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அந்த நாளில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை பட்டியல் போடுங்கள். இதனால், உங்களுக்கு அந்த நாள் எப்படி இருக்கப்போகிறது என்பது தெரிவதோடு, செய்ய வேண்டிய வேலைகளை முன்கூட்டியே செய்ய உதவும். 

Morning Habits

ஆக்டிவான காலை:

காலையில் வர்க்-அவுட் அல்லது யோகா செய்வது உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்ல, உடலுக்கு ஆற்றல் தருவதற்கும்தான். தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | உடல் எடை சட்டென குறைய-காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்யுங்கள்!

ஹெல்தியான உணவு:

காலையிலேயே வயிறு அல்லது உடல் மந்தப்படும் படி உணவு உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் மனதுக்கும் உடலுக்கும் ஏற்ற உணவை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டியது உங்களது கடமையாகும். அந்த உணவை நீங்களே தயார் செய்து கொண்டால் கூடுதல் சிறப்பு. 

மூச்சுப்பயிற்சி:

மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்வது நம்மை நாமே நிதானப்படுத்திக்கொள்ள உதவுமாம். தினமும் எழுந்தவுடன் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், நம்  மனதிற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் பாசிடிவான எண்ணங்கள் தோன்றுமாம். 

முதல் வேலைகள்:

உங்கள் நாளை வீட்டில் கழிக்க இருக்கிறீர்களோ அல்லது அலுவலகத்தில் கழிக்க இருக்கிறீர்களோ, எது முதன்மை வேலை என நினைக்கிறீர்களோ அந்த வேலைகளை முதலிலேயே செய்து முடித்து விட வேண்டும். உதாரணத்திற்கு வீட்டில் இருக்கும் அலமாரியை சரிப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அதை செய்து முடித்து விட வேண்டும்.  “இந்த வேலையை செய்யலாமா..அந்த வேலையை செய்யலாமா..?” என்று யோசித்துக்கொண்டே இருந்தால் ஒரு வேலையும் நடக்காமல் நின்று போய் விடும்.

சமூக வலைதளம்:

காலையில் எழுந்தவுடன் அருகில் இருப்பவரின் முகத்தை பார்க்கிறோமோ இல்லையோ, சமூக வலைதளத்தை எடுத்து யார் யார் என்னென்ன நமக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை பார்த்துவிடுவோம். இதனால் நமக்கே தெரியாமல் சில நிமிட மணித்துளிகளை படுக்கையிலேயே கழித்து விடுகிறோம். அப்படி நேரத்தை வீணடிக்காமல், கண் விழித்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் வழியை பாருங்கள். 

மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்யுங்கள்! வெற்றி உங்கள் வாசல் கதவை தட்டும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News