பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!
How To Remove Bitter Taste From Bitter Gourd : நம்மில் பலருக்கு, பாகற்காயின் கசப்பு சுவை இல்லாமல் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
How To Remove Bitter Taste From Bitter Gourd : சிறு வயதில் இருந்து, இப்போது வரை, நாம் பெரிதாக தொடாத காயாக இருக்கும் பாகற்காய். இந்த பெயரை கூறினாலே பலருக்கும் கசப்பான உணர்வு வாயில் ஒட்டிக்கொண்டது போன்ற உணர்வு ஏற்படும். இப்படி, பாகற்காயை பார்த்தாலே பத்து அடி தள்ளி ஓடுபவர்கள், கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த பாகற்காயின் கசப்பான சுவை தெரியாமல் பார்த்து கொள்ளலாம். என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஊற வைக்கும் முறை:
முதலில், பாகற்காயை நன்றாக கழுவி, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய துண்டுகளை, ஒரு கிண்ணம் தண்ணீரில் கல் உப்பு அல்லது தூள் உப்பு போட்டு ஊற வைக்க வேண்டும்.
குறைந்தது 20-30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அந்த உப்பு, கசப்பு தன்மையை எடுத்து விடும்.
அந்த துண்டுகளை நன்கு பிழிந்து, தண்ணீர் இல்லாமல் இன்னொரு பாத்திரத்தில் மாற்றவும்.
இந்த பாகற்காய்கள், வறுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
கொதிக்க வைக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது கொஞ்சமாக உப்பு மற்றும் மஞ்சள் தூவவும்.
துண்டுதுண்டாக வெட்டி வைத்த பாகற்காயை, கொதிக்கும் நீரில் போட்டு 3-5 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
பாகற்காயில் இருந்து தண்ணீரை வடிக்கட்டி விட்டு, அதை வைத்து சமைக்கலாம்.
தயிர் மற்றும் மோரில் ஊற வைப்பது:
பாகற்காயை துண்டு துண்டாக வெட்டி, தயிர் அல்லது மோருடன் சேர்த்து ஊற வைக்கவும்.
அதனை 15-20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
சமைப்பதற்கு முன்பு, அந்த பாகற்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு எடுத்து சமைக்கவும்.
இது, கசப்பு தன்மையை நீக்குவது மட்டுமன்றி, தனித்துவமான சுவையையும் பாகற்காய்க்கு சேர்க்கிறது.
புளியில் ஊற வைப்பது:
பாகற்காயை வெட்டி வைத்து, அவற்றின் மீது சிறிதளவு சர்க்கரை தூவவும்.
இந்த பாகற்காயை, புளி கரைத்த தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
நன்கு கழுவிய பின்னர் சமைக்க எடுத்துக்கொள்ளலாம்.
இது, ஒரு வித புளிப்பு, இனிப்பு மற்றும் சிறு கசப்பு உணர்வை கொடுக்கும்.
தோல் உரித்தல்:
பாகற்காயின் தோலை உரிக்கலாம்.
பாகற்காயை வெட்டி, அதில் இருக்கும் விதைகளை ஸ்பூன் உதவியுடன் எடுத்து, பின்னர் சமைக்கலாம்.
பிற உணவு பொருட்களுடன் சேர்க்கவும்:
பாகற்கயை, தக்காளி, வெங்காயம், நாட்டு சர்க்கரை, தேங்காய், தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுடன் சேர்த்து சமைக்கலாம். இப்படி செய்தால், கண்டிப்பாக அதன் கசப்பு தன்மை, கொஞ்சமாவது குறையும்.
மேலும் படிக்க | Health Alert: பாகற்காயுடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!
பாகற்காயை வைத்து என்னவெல்லாம் செய்யலாம்?
பாகற்காயை வைத்து, நாம் துவையல் செய்வதையும், வறுப்பதையும் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இதை வைத்து இது மட்டுமல்ல, வித்தியாசமாக இன்னும் பல விஷயங்களை செய்யலாம்.
பாகற்காயை, வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சேர்த்து ஜூஸாக குடிக்கலாம். ஊறுகாய் செய்யவும் பயன்படும் உணவுகளுள் ஒன்று, பாகற்காய். சூப், சிப்ஸ், அல்வா என பல வகையான உணவுகளை, பாகற்காயை வைத்து செய்யலாம். இந்த முறைகளை பயன்படுத்தி பாகற்காய் சாப்பிடுவதால், உடலுக்கு வலு சேரும், இன்னும் பாகற்காயை சாப்பிட வேண்டும் என்றும் தாேன்றும்.
மேலும் படிக்க | இவர்கள் பாகற்காய் பக்கமே போகக்கூடாது: போனால், பிரச்சனைதான்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ