அனைவருக்கும் தனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா? ஆனால், பலர் இப்படிப்பட்ட நல்ல திருமண வாழ்க்கையில் இருப்பதில்லை. அந்த வாழ்க்கை யாரையும் தேடி வந்து அமையாது, நாமேதான் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நன்றியுணர்வு:


வாழ்வில் இருக்கும் அனைத்தையும் குறித்து எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்க கூடாது. தினமும், உங்களுக்கு கிடைத்து இருக்கும் விஷயங்களுக்காகவும் உறவுகளுக்காகவும் நன்றியுணர்வுடன் இருங்கள். இது, உங்கள் வாழ்வில் இருக்கும் குறைகளை காட்டுவதை தாண்டி, நிறைகளையும் காண்பிக்கும். இது, உங்களை மகிழ்ச்சியாக்குவதோடு மட்டுமன்றி உங்கள் பார்ட்னருடனான உறவையும் மேம்படுத்த தூண்டும். 


பிறரை புரிந்து கொள்ள முயல வேண்டும்:


பிறரை புரிந்து கொள்ள, முதலில் உங்களை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பார்ட்னரின் தேவை என்ன, அவரது உணர்வு என்ன என்பதை தெரிந்து நடந்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணர்வுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை புரிந்து கொள்ளும் திறன், ஒருவருடன் இன்னொருவர் உன்னதமான மற்றும் ஆழமான உறவை ஏற்பட காரணமாக இருக்கலாம். இது, பிற்காலத்தில் தவறான புரிதல்கள் உண்டாவதையும், இன்னொருவரின் வாழ்க்கையை புரிந்து கொள்வதையும் மேம்படுத்தும். 


தெளிவான பேச்சு:


ஒரு உறவை நன்றாக மேம்படுத்த, நாம் தெளிவாக பேச வேண்டியது அவசியம் ஆகும். சரியாகவும், தெளிவாகவும் பேசிவிட்டால், பிற்காலத்தில் வரக்கூடிய தவறான புரிதல்களை தவிர்க்கலாம். அது தனிப்பட்ட வாழ்வு குறித்து இருந்தாலும் சரி, உங்கள் வேலை குறித்து பேச வேண்டிய விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையும் தெளிவும் இருக்கும். இது, உங்கள் திருமண உறவில் மட்டுமன்றி அனைத்து உறவுகளுக்கு முக்கியமான விஷயமாக கருதப்படும். அது மட்டுமன்றி, தெளிவான பேச்சினால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படுவதை தவிர்த்து, இன்னும் மேம்படுத்த உதவும். 


உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்:


உங்கள் உடல் மற்றும் மன நலன்களை நன்றாக மேம்படுத்திக்கொள்வது உண்மையாகும். இதனால், உங்களுடனான உங்களது பார்ட்னருடனான உறவை மேம்படுத்த உதவும். ஒருவர், பிறர் மீது தனது மகிழ்ச்சி மற்றும் அமைதியான வாழ்க்கையை சார்ந்து இல்லாமல் இருந்தால், அவர்களால், இன்னொருவர் தன் வாழ்க்கைக்குள் வந்தாலும் அவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள முடியும். 


மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!


உங்கள் நிலையில் இருந்து கொள்வது:


நீங்களும் உங்கள் பார்ட்னரும் சண்டையிட்டு கொள்ளும் போதும், உணர்வுகள் கையை மீறி போகும் போதும் ரு சரியான சமநிலையான கோட்டில் இருவரும் தனித்தனியே இருந்து கொள்வது நல்லது. கோபத்தில் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளாமல், அந்த சமயத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து உங்களால் கூறப்போகும் வார்த்தைகளை மீண்டும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். 


எதுவும் கடந்து போகும்:


ஒன்றை நாம் அதிகம் விரும்புகிறோம் என்றால், அதை நாம் விட்டுக்கொடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். உங்களது பார்ட்னர் உங்களை விட்டு விலக நினைத்தால், உங்களால் முடிந்தவரை போராட வேண்டும். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்த உறவில் விருப்பம் இல்லை என்று தெரிந்த பிறகு, அவர்களை விட்டு விலகவும் தயாராக இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | எங்காவது ஓடிப்பாேக வேண்டும் என ஆசையாக இருக்கிறதா? காரணம் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ