இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், IBPS கிளார்க் அறிவிப்பு 2022 ஆன்லைனில் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான காலியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்டவணையின்படி, IBPS கிளார்க் ஆட்சேர்ப்பு 2022 க்கான பதிவுகள் நாளை முதல், அதாவது ஜூலை 1, 2022 முதல் தொடங்கும். ஐபிபிஎஸ் கிளார்க் வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும், தகவல்களை பெறவும் ibps.in என்ற வலைத்தளத்தை அணுகலாம். 


தற்போது வெளியிடப்பட்டுள்ள IBPS கிளார்க் 2022 அறிவிப்பு சில முக்கியமான தேதிகளுடன் சுருக்கமாக மட்டுமே உள்ளது. கிளார்க் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 21, 2022 அன்று முடிவடையும். வழக்கமாக, இந்த IBPS கிளார்க் ஆட்சேர்ப்பு இரண்டு பகுதிகளாக நடைபெறும் - முதல்நிலை/முதற்கட்டத் தேர்வு (ப்ரிலிம்ஸ்/ப்ரிலிமினரி எக்சாம்) மற்றும் முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் எக்சாம்).


மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு


ஐபிபிஎஸ் கிளார்க் ஆட்சேர்ப்பு 2022க்கான விரிவான அறிவிப்பு நாளை விண்ணப்பப் படிவ இணைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுதி நிபந்தனைகள், எப்படி விண்ணப்பிப்பது மற்றும் இது போன்ற அனைத்து முக்கிய விவரங்களும் இதில் இருக்கும். IBPS கிளார்க் 2022 அறிவிப்பு குறித்த சில முக்கியமான விவரங்களைச் கீழே தெரிந்துகொள்ளலாம்.


IBPS கிளார்க் 2022 - முக்கிய தேதிகள்


- IBPS கிளார்க் 2022 பதிவு துவக்கம் - ஜூலை 1, 2022


- விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜுலை 21, 2022


- தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான IBPS கிளார்க் 2022 அட்மிட் கார்டுகள் - ஆகஸ்ட் 2022


- IBPS கிளார்க் தேர்வுக்கான பயிற்சி - ஆகஸ்ட் 2022


- ப்ரிலிம்ஸ் தேர்வுகளுக்கு கால் லெட்டர்களை பதிவிறக்கம் செய்தல் - ஆகஸ்ட் 2022


- ப்ரிலிம்ஸ் ஆன்லைன் தேர்வுகள் - செப்டம்பர் 2022


- IBPS கிளார்க் ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் - செப்டம்பர்/அக்டோபர் 2022


- IBPS கிளார்க் மெயின்ஸ் கால் லெட்டர்ஸ் - செப்டம்பர்/அக்டோபர் 2022


- IBPS கிளார்க் மெயின்ஸ் - அக்டோபர் 2022


- ப்ரொவிஷனல் அலாட்மண்ட் - ஏப்ரல் 2023


IBPS கிளார்க் ஆட்சேர்ப்பு 2022க்கான சரியான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இதற்கிடையில், அனைவரும் இதற்கு தேவையான அடிப்படை ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், சுமூகமான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு இந்த தேதிகளை குறிப்பிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். விரிவான IBPS கிளார்க் அறிவிப்பு 2022க்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR