நெயில் பாலிஷ் ரிமூவர் காலியாகிவிட்டதா; கவலை வேண்டாம்... இதை ட்ரை பண்ணுங்க!
நெயில் பாலிஷ் 4 முதல் 7 நாட்கள் வரை தான் நிலைக்கும். அதற்கு மேல் நிலைக்காது. சிலர் ஏற்கனவே நகங்களில் எஞ்சியிருக்கும் நெயில் பாலிஷ் மீதே, புதிதாக நெயில் பாலிஷ் போட்டு விடுவார்கள்.
நகத்தை அழகுபடுத்த நாம் நயில் பாலிஷ் பூசிக் கொள்கிறோம். நெயில் பாலிஷ் புதிதாக போட்டுக் கொண்டால் நகங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அது சிறிது பெயர்ந்து விட்டால், பார்க்க அசிங்கமாக இருக்கும்.
அதுவும், நாம் எங்கேயாவது முக்கியமான இடத்திற்கு செல்லவோ அல்லது பார்ட்டிக்கு செல்ல தயாராகும் போது, நெயில் பாலிஷ் ரிமீவர் காலியாகி போயிருக்கும்.ஆனால், அதற்காக கவலைப்பட தேவையில்லை.
நெயில் பாலிஷ் 4 முதல் 7 நாட்கள் வரை தான் நிலைக்கும். அதற்கு மேல் நிலைக்காது. சிலர் ஏற்கனவே நகங்களில் எஞ்சியிருக்கும் நெயில் பாலிஷ் மீதே, புதிதாக நெயில் பாலிஷ் போட்டு விடுவார்கள். அது நகத்தின் அழகை முழுமையாக கெடுத்து விடும். அப்படி செய்யவே கூடாது.
சரி, நெயில் பாலிஷ் ரிமூவர் தீர்ந்து விட்டால் என்ன செய்யலாம்...
ALSO READ | Laptop வாங்க போறீங்களா; நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
உங்களிடம் டியோடரண்ட் ஸ்ப்ரே இருந்தால், அதனையும் பயன்படுத்தலாம். நெயில் பாலிஷ் ரிமூவரைப் போல் வேகமாக வேலை செய்யாது என்றாலும், சிறிது நேரம் காட்டனை வைத்து ரப் செய்தால் முழுமையாக நீங்கி விடும்.
டூத் பேஸ்ட் உங்களிடம் இல்லாமல் இருக்காது. டூத்பேஸ்ட்டில், நெயில் பாலிஷ் ரிமூவரில் உள்ள எதில் ஆக்ஸீடேட் இருக்கிறது.அதனால், டூத்பேஸ்டை எடுத்து தடவி, சிறிது நேரம் காட்டனை வைத்து தேய்த்தால், நெயில் பாலிஷ் நீங்கி விடும்.
இப்போது கொரோனா காலம். அதனால், ஹாண்ட் சானிடைஸர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். சிறிது ஹாண்ட் சானிடைஸரை நகத்தின் மீது தடவி, காட்டனை வைத்து தேய்த்தால், நெயில் பாலிஷ் முழுமையாக அகன்று விடும்.
அதனால், இனி நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லையே என கவலைப் பட வேண்டாம். அதற்கு மாற்றாக உள்ள மேலே உள்ள பொருட்களை பயன்படுத்தி, நீங்கள் உங்கள் நகங்களை விருப்பபடும் போதெல்லாம் அழகு படுத்திக் கொள்ளலாம். உங்கள் உடைக்கு ஏற்ற வண்ணங்களை நகத்தில் பூசி அழகு பார்க்கலாம்.
ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்