New RBI Rules: மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, இப்போது நீங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கடந்து செல்ல காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் சம்பளம் (Salary) அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும்.


NACH வசதிகள் இப்போது முழு வாரமும் கிடைக்கும்


பலமுறை மாதத்தின் முதல் நாள் வார இறுதியில் வருவது வழக்கம். இதன் காரணமாக சம்பளம் பெறும் வர்க்கம் தங்கள் சம்பளக் கணக்கில் வரவுக்காக திங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.


ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) ஆளுநர் சக்தி காந்தா தாஸ், கடந்த மாதம் ஜூன் மாத கடன் கொள்கை மறுஆய்வின் போது, ​​வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்கும், 24x7 ரியல் டைம் மொத்த தீர்வின் (ஆர்.டி.ஜி.எஸ்), நன்மைகளைப் பெறுவதற்கும், தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டும் இயக்கத்தில் உள்ள NACH, இனி வாரம் முழுவதும் இயக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த மாற்றம் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.


சம்பளம், ஓய்வூதியம், ஈ.எம்.ஐ கட்டணம் இப்போது வார இறுதி நாட்களிலும் கிடைக்கும்
NACH என்பது இந்திய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தால் (NPCI) இயக்கப்படும் கட்டண செலுத்தும் முறைமையாகும். இது ஈவுத்தொகை, வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான கடன் பரிமாற்றங்களுக்கு உதவுகிறது.


ALSO READ: RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்


இது தவிர, மின்சார பில், கேஸ் சிலிண்டர் கட்டணம் (Gas Cylinder Bill), தொலைபேசி, நீர் கட்டணம், கடன் இ.எம்.ஐ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது நீங்கள் திங்கள் முதல் வெள்ளி வரைதான் கட்டணம் கட்ட முடியும் என காத்திருக்க வேண்டியதில்லை. அதாவது இந்த அனைத்து வசதிகளையும் இனி வார இறுதி நாட்களிலும் பெற முடியும். இந்த வேலைகளை நாம் இனி வார இறுதி நாட்களிலும் செய்து முடிக்கலாம்.


NACH, பயனாளிகளுக்கான நேரடி மற்றும் பயனுள்ள டிஜிட்டல் பயன்முறையின் (DBT) பிரபலமான மற்றும் முக்கிய டிஜிட்டல் முறையாக உருவெடுத்துள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது கொரோனா தொற்று பரவியுள்ள இந்த காலங்களில், சரியான நேரத்திலும் வெளிப்படையாகவும் அரசாங்க மானியங்களை பயனாளிகளுக்கு மற்ற உதவுகிறது.


தற்போது, ​​வங்கிகள் பணிபுரியும் நாட்களில் மட்டுமே நாச் சேவைகள் கிடைக்கின்றன, ஆனால் ஆகஸ்ட் 1 முதல், இந்த வசதி வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.


ALSO READ: ரிசர்வ் வங்கி FD விதிகளை மாற்றியுள்ளது; ‘இதை’ செய்யாவிட்டால் உங்கள் வட்டி குறையும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR