மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டு சேவைகளுக்கு தடை: RBI

வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 07:56 AM IST
மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டு சேவைகளுக்கு தடை: RBI title=

மாஸ்டர் கார்டு நிறுவன புதிய (டெபிட், கிரெடிட்) கார்டுகள் சேவைகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை அதன் நெட்வொர்க்கில் சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.,

மாஸ்டர் கார்டு (MasterCard) நிறுவனம் இந்தியாவில் கட்டண முறை தரவுகளை சேமிப்பதில் அதன் விதிமுறைகளை மீறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) போதுமான வாய்ப்புகளும், கால அவகாசமும் கொடுக்கப்பட்டும் மாஸ்டர் கார்டு நிறுவனம் வாடிக்கையாளர்கள் மீதான கட்டண தரவுகளை சேமிக்க தவறியது. விதிமுறையை சரியாக பின்பற்றவில்லை என்பதால் தடை அவசியமாகிறது.

ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்

ரிசர்வ் வங்கியின் கட்டளைக்கு மாஸ்டர் கார்டு இணங்க தவறியதால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுடுள்ளது. மறுபுறம் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் மாஸ்டர் கார்டின் தற்போதைய வாடிக்கையாளர்களை எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

வங்கியின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கல்களை எதிர்கொண்டது, இணைய வங்கி மற்றும் கட்டண முறைகளில் பல குறைபாடுகள் இருந்தது. எனவே டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி HDFC வங்கியில் அனைத்து டிஜிட்டல் அறிமுகங்களையும் தற்காலிகமாக தடை செய்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புகளை உள்ளடங்கிய சர்வர், இந்தியாவில் இருக்க வேண்டும் என தெரிவித்தது. 

ALSO READ | ரிசர்வ் வங்கி FD விதிகளை மாற்றியுள்ளது; ‘இதை’ செய்யாவிட்டால் உங்கள் வட்டி குறையும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News