வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் (Kim Jong Un) தான் சர்வாதிகாரி மட்டுமல்ல, கொடுங்கோலன் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 வட கொரியா நாட்டில் உணவு தட்டுபாடு நிலவுகிறது. பல மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துயரை போக்க அரசு சிறந்த திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று தான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும்.


ஆனால், இவர் தனித்துவமான சர்வாதிகாரி அல்லவா. அதனால், ஒரு கொடூரமான வினொதமான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


அது என்ன உத்தரவு என்றால், நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் இருக்கும் மாமிச தொழில் நிறுவனங்களிடம் அனைவரும் தங்கள் ஆசையாக வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.


நாட்டில் மோசமான பொருளாதார நிலை மற்றும் உணவு பற்றாக்குறையினால்,மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதை தடுக்க, அதிபர் கிம் ஜாங் உன் இந்த நடவடிக்கைய் எடுத்துள்ளார் என நியூசிலாந்தின் ஹெரால்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


மற்றொரு சாரார் தெரிவிப்பது என்னவென்றால், நாய்களை செல்ல பிராணிகளாக வளர்ப்பவர்கள் பெரும் பணக்காரர்களாக, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதால், அவர்களை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.


வட கொரியா நாட்டில் உள்ள சாதாரண மக்கள், தங்கள் பண்ணைகளில், பன்றிகளையும் பிற கால்நடைகளையும் அதிகம் வளர்க்கிறார்கள். ஆனால் உயர்  மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Xinjiangஇல் மசூதியை இடித்து, பொதுக் கழிப்பறை கட்டி அவமானப்படுத்தும் சீனாவின் அட்டகாசம்...


செல்ல பிராணிகளை வளர்ப்பது, முதலாளித்துவ சித்தாந்தத்தினால் ஏற்பட்டுள்ள ஒரு பழக்கம் என்ற எண்ணம் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்தின் ஹெரால்ட் கூறியுள்ளது.


செல்ல நாய் வைத்திருக்கும் அனைவரும் இந்த உத்தரவினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அவர்களால் இந்த உத்தரவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால்,  வடகொரியா நாடு ஒரு சர்வாதிகாரம் நடக்கும் நாடு. அங்கு போராட்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


மேலும் படிக்க | உலகுக்கு கொரோனாவைக் கொடுத்துவிட்டு, உள்ளூரில் குத்தாட்டமா? Watch Wuhan Party!!


சமீபத்தில் ஐ.நா.  (UN) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, வட கொரியாவின் மக்கள் தொகையான சுமார் 2.5 கோடி பேரில்,  60 சதவீதம் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெல் பயிர்கள் நாசமடைந்ததாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாகவும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.


தற்போதுள்ள சூழ்நிலையில், அந்நாட்டில் செல்ல நாயை ஆசையாக வளர்த்து பராமரிக்கும் அனைவரும் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர்.