கட்னி: மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh), ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், அதில் 8 பேர் தற்போது தொற்றிலிருந்து குணமாகிவிட்டனர். குணமடைந்த மகிழ்ச்சியை இந்த குடும்பம் மருத்துவமனையிலேயே நடனமாடி கொண்டாடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிய ஒரு வீடியோவில், இந்த குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவது தெரிகிறது. பாலிவுட் திரைப்படமான 'சிச்சோரே' படத்தின் 'சிந்தா கர்கே க்யா பாயேகா, மர்னே ஸே பெஹ்லே மர் ஜாயேகா' பாடலுக்கு இவர்கள் நடனமாடுவதைக் காண முடிகிறது. ‘கவலைப்பட்டு எதை சாதிக்கப்போகிறாய், கவலைக் கொண்டால் இறப்பு வருவதற்கு முன் இறந்து விடுவாய்’ என்பது இந்த வரிகளின் பொருளாகும்.


கொரோன தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், இதிலிருந்து மீண்டு விடுவோம் என்ற உறுதியுடன இருக்க வேண்டும். மனதை தளர்வடைய விடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பாடல் அமைந்துள்ளது.


கட்னி மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் யஷ்வந்த் வர்மா செவ்வாய்க்கிழமை கூறுகையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த 19 உறுப்பினர்களின் கொரோனா பரிசோதனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி நேர்மறையாக வந்ததாகவும், பின்னர் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் ஒன்றாக தங்கியிருந்த குடும்ப உறுப்பினர்களில் சிலர், அவர்களது பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததையடுத்து, அதை நடனமாடி கொண்டாடினர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ: ஒரே நாளில் 918470 பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதார அமைச்சகம்


குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், "ஆரம்பத்தில் நாங்கள் பயந்தோம், ஆனால் மாவட்ட மருத்துவமனையில் சரியான சிகிச்சைக்குப் பிறகு நாங்கள் குணமடைந்தோம். குடும்ப உறுப்பினர்கள் இந்த மகிழ்ச்சியான தருணத்தை நடனமாடி கொண்டாடினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சப்படாமல் உறுதியோடு தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த வீடியோ பகிரப்பட்டது" என்று கூறினார்.



உண்மைதான்! மனதால் நாம் தோல்வியடியந்து விட்டால், எந்த மருந்தாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வராமல் காப்போம். வந்துவிட்டால் உறுதியுடன் நின்று கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம்!! 


ALSO READ: COVID-19 Impact: ஜூலையில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு, பீதி ஏற்படுத்தும் இந்த புள்ளிவிவரம்