இந்தியாவின் ‘1st பெண்கள் பீர்’ அறிமுகம்... அப்படி என்ன ஸ்பெஷல்...!
குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!!
குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!!
மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஹரியான மாநிலத்தில் குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்திம் குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற ‘பப்’ ஒன்றில் ‘இந்தியாவின் முதல் பெண்கள் பீர்’ என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘‘பொதுவாக பீரின் கசப்பு சுவையை பெண்கள் பலரும் விரும்புவதில்லை. இதனால் தான் பீரின் சுவையில் ஒரு புது மாறுதலைச் செய்து பெண்களுக்கான முதல் பீர் என அறிமுகப்படுத்தியுள்ளோம்” என அந்த பப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து நிர்வாகத்தினர் கூறுகையில்; “முதலில் சம்மர் பீர் என்று தான் இந்த மாற்றுச்சுவை உள்ள பீரை அறிமுகம் செய்தோம். ஆனால், வாடிக்கையாளர்களாலே ‘பெண்கள் பீர்’ என்ற பெயர் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த பீர் மிகவும் இனிப்பானதாக இருப்பதாலே இதை இவ்வாறு அழைக்கின்றனர். பெண்களும் இனிமையானவர்கள் தானே” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பீர் குறித்த விவரம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகவே, இந்த பீர் குறித்து அறிந்த நெட்டிசன்கள், வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவுல் கிடைத்த மாதிரி என்ற பழமொழிக்கு இணங்க கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் சில பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.