மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க ரயில்வே முயற்சித்து வருகிறது. அதன்படி தற்போது பெரும்பாலான மக்கள் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதற்கான தொகை அக்கவுண்டிலிருந்து எடுக்கப்படுகிறது. ஒருவேளை ஏதேனும் காரணங்களுக்காக பயணத்தை கேன்சல் செய்துவிட்டால் அதற்கான முன்பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது எவ்வளவு பணம் திரும்பப் பெறப்படும், முழுப்பணம் திரும்பக் கிடைக்குமா போன்ற குழப்பங்கள் பயணிகள் இடையே இருந்து வருகிறது. அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. ஆம்., முன்பதிவு செய்த முழுத் தொகையும் ரிட்டன் வழங்கப்படாது. ஐஆர்சிடிசி செயலில் புக்கிங் செய்த பெட்டி, கேன்சல் செய்யும் நேரம் போன்றவற்றைப் பொறுத்து வெவ்வேறான அளவில் ரீஃபண்ட் தொகை வழங்கப்படுகிறது. எனவே கன்பார்ம் டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரீஃபண்ட் வழ்ங்கப்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.


மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!


* ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு கேன்சுலேஷனுக்கு முன்னர் ஜெனரல் டிக்கெட் கேன்சல் செய்தால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படும்.
* ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது, ​​கேன்சுலேஷன் கட்டணமாக ரூ.120 செலுத்த வேண்டும்.
* மறுபுறம், ஏசி சேர் கார் / ஏசு 3 டையர் / ஏசி 3 எகானமி டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.180 செலுத்த வேண்டும்.
* அதேநேரத்தில் ஏசி 2ஆம் கிளாஸ் டிக்கெட்டை கேன்சல் செய்தால், நீங்கள் 200 ரூபாய் செலுத்த வேண்டும். மறுபுறம், நீங்கள் ஏசி முதல் கிளாஸ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் டிக்கெட்டை கேன்சல் செய்தால், நீங்கள் ரூ.240 கட்டணம் செலுத்த வேண்டும்.
* ரயில்வே ஏசி கிளாஸ் டிக்கெட்டை கேன்சல் செய்யும் பயணிகளிடம் இருந்து ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்பட்டும். அதே நேரத்தில், ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு நீங்கள் எந்தவிதமான ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை.


டிக்கெட் கட்டணத்தில் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்
* ரயில் புறப்படும் நேரத்திலிருந்து இரண்டு நாட்கள் முதல் 12 மணி நேரம் வரை டிக்கெட்டை கேன்சல் செய்தால், மொத்த டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
* அதேசமயம், 12 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை டிக்கெட்டை கேன்சல் செய்தால், உங்கள் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
* இதனுடன், 4 மணி நேரத்திற்குள் நீங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால், உங்களுக்கு எந்தவிதமான ரீஃபண்ட்டும் கிடைக்காது,
* ஆர்ஏசி டிக்கெட்டுகளில் 30 நிமிடங்களுக்கு முன்பே கேன்சல் செய்யலாம். ஆர்ஏசி ஸ்லீப்பர் கிளாஸ் இல் டிக்கெட்டை கேன்சல் செய்தால், நீங்கள் 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
* மறுபுறம், ஏசி ஆர்ஏசி டிக்கெட்டை கேன்சல் செய்தால், ரூ.65 பிடித்தம் செய்யப்படும்.


மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR