Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்
Indian Railway Latest Update: இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியது.
கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று தொடங்கியபோது இந்திய ரயில்வே பல மாற்றங்களைச் செய்தது. அதன்படி ரயில்வே செய்த சில முடிவுகளில், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டில் வழங்கப்படும் சலுகையை நிறுத்துவது குறித்த முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவால் பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர், ஆனால் மறுபுறம் ரயில்வேக்கு இதன் மூலம் பெரும் பலன் கிடைத்துள்ளது.
ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் பயணக் கட்டண சலுகை ரத்து தொடர்பாக கேட்ட கேள்விகளின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி சந்திரசேகர் கவுர் தாக்கல் செய்த ஆர்டிஐக்கு பதிலளித்த இந்தியன் ரயில்வே, மார்ச் 20, 2020 முதல் மார்ச் 31, 2022 வரை 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கவில்லை என்று தெரிவித்தது.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!
மொத்த வருவாய் 3,464 கோடி
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண்களுக்கும் சலுகை வழங்காததன் மூலம் ரயில்வே சுமார் 1500 கோடி பயனடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் மூலம் பெற்ற மொத்த வருவாய் ரூ.3,464 கோடி ஆகும். 58 வயதுடைய பெண்களுக்கு 50 சதவீதமும், 60 வயதுடைய ஆண்களுக்கு 40 சதவீதமும் ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
சலுகையை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது
சலுகையைப் பெற, பெண் பயணிகளின் வயது குறைந்தது 58 ஆகவும், ஆண் பயணிகளுக்கு 60 வயது ஆகவும் இருக்க வேண்டும். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரயில் சேவைகள் சில காலத்திற்கு ரத்து செய்யப்பட்டன, ஆனால் இப்போது சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது சலுகைக்கான கோரிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதன் மூலம் மட்டும் இந்தியன் ரெயில்வேக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR