இந்திய ரயில்வேவின் சமீபத்திய செய்திகள்: கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டணச் சலுகையை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, ரயில் கட்டணத்தில் தள்ளுபடி குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தற்போது அரசு இது தொடர்பாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி தைனிக் பாஸ்கரில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மீண்டும் வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோரிக்கையை பரிசீலித்த பின் எடுக்கப்பட்ட முடிவு:
இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பல அமைப்புகள் மற்றும் குழுக்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சில சிறப்பு சந்தர்ப்பங்களில் தவிர, எந்தப் பயணிகளுக்கும் ரயில் கட்டணத்தில் (Senior Citizen Ticket Concession Update) விலக்கு அளிக்கப்படாது என ரயில்வே முடிவு செய்துள்ளது. கட்டண மானியம் முன்பு போலவே தொடரும் என்பதுதான் தள்ளுபடியை மீண்டும் வழங்காததன் பின்னணியில் உள்ள ரயில்வேயின் வாதம் ஆகும். ஆனால் கூடுதல் தளர்வு அளிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


100 டிக்கெட்டு 55 ரூபாய்க்கு விற்பனை:
இதனிடையே சமீபத்தில், ரயில்வே அமைச்சரும் (Railway Minister Ashwini Vaishnaw) ஒரு நிகழ்ச்சியின் போது பயணிகளுக்கு 100 ரூபாய் டிக்கெட்டுகளை 55 ரூபாய்க்கு வழங்குவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ரயில்வே ஏற்கனவே மானிய விலையில் தான் தற்போது ரயில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது என்று கூறியிருந்தார். இதற்குப் பிறகு, மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பிற பிரிவினருக்கு 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வழங்கப்பட்ட சலுகைகள் எதிர்காலத்திலும் தொடங்கப்படாது என்பது தெளிவாகியுள்ளது. இதற்கிடையில் கொரோனா பலவலுக்கு முன்னதாக, மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை, 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை (Indian Railways) அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நீண்ட ஆயுளுக்கு..காலையில் எழுந்ததும் ‘இந்த’ 4 விஷயங்களை செய்யுங்கள்!


இந்த தள்ளுபடி 2020 ஆம் ஆண்டு முதல் ரயில்வே துறையால் (IRCTC) நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக, நாடாளுமன்றக் குழுக்கள் (Parliament Session), பல்வேறு அமைப்புகள் மற்றும் எம்.பி.க்கள் விதிவிலக்கை மீட்டெடுக்க பரிந்துரை செய்தனர். இருப்பினும், புற்றுநோய் போன்ற சில தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணச் சலுகை தொடரும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வரும் காலங்களில் இந்த வசதிகள் அதிகரிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. வயதானவர்கள் மற்றும் பெண்களைப் போல முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் கீழ் படுக்கைகள் (Lower Birth) கிடைக்கும்.


யாருக்கு லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டும்:
ரயில்வே துறையால் கீழ் பெர்த்கள் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளில் சில கீழ் பெர்த்கள் ரயில்வேயால் ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன், சில நடுத்தர பெர்த்களும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்த அரிய ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா? அப்போ நீங்க தான் லட்சாதிபதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ