ரயிலில் இந்த சீட்டை எளிதாக புக் செய்வது எப்படி? - இதில் பாருங்க!

Indian Railways Lower Birth: ரயிலில் கீழ் பெர்த்தை பெறுவது பெரும் கடினம் என்றாலும், அதனை பெற வாய்ப்பை அதிகப்படுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 12, 2023, 04:42 PM IST
  • IRCTC செயலி மூலம், மக்கள் வீட்டில் இருந்த முன்பதிவு செய்யலாம்.
  • கீழ் பெர்த்கள் சில மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  • கீழ் பெர்த்கள் பெற முன்னுரிமைக்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
ரயிலில் இந்த சீட்டை எளிதாக புக் செய்வது எப்படி? - இதில் பாருங்க! title=

Indian Railways Lower Birth: தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், ரயில்வேயில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல்முறையும் முன்பை விட எளிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மக்கள் ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தேவையில்லை. தற்போது, மக்கள் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் அமர்ந்து முன்பதிவு செய்யலாம். IRCTC செயலி மூலம், மக்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை எடுக்கலாம்.

முன்பதிவு

ரயிலில் முன்பதிவு செய்யும் போது, வெவ்வேறு வகுப்பு பெட்டிகள் உள்ளன. இவற்றில் படுக்கை வசதிகள் கொண்ட ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்யப்படுகின்றன. அதில், கீழ் பெர்த், நடுத்தர பெர்த் மற்றும் மேல் பெர்த் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதே சமயம் கீழ் பெர்த்தை பெற பயணிகள் மிகவும் விரும்புவார்கள். இருப்பினும், மக்களுக்கு அவ்வளவு எளிதாக லோயர் பெர்த் கிடைப்பதில்லை. 

மேலும் படிக்க | பயணத்தில் திடீர் பிரச்னையா... கவலை வேண்டாம் - ரயில் டிக்கெட் தேதியை எளிதாக மாற்றலாம்!

உண்மையில், ரயில்வே துறையால் கீழ் பெர்த்கள் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளில் சில கீழ் பெர்த்கள் ரயில்வேயால் ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன், சில நடுத்தர பெர்த்களும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், யாராவது ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்து, அங்கு மாற்றுத்திறனாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் போதெல்லாம், ரயில்வேயில் கீழ் பெர்த் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குப் பிறகு, கர்ப்பிணிப் பெண்களுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பு

நீங்கள் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போதெல்லாம், முன்பதிவின் போது ஊனமுற்றவர், கர்ப்பிணி அல்லது மூத்த குடிமகன் என்று குறிப்பிட வேண்டும். இதன் மூலம், கீழ் பெர்த்தை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை பெற முடியும். மறுபுறம், நீங்கள் இந்த மூன்று வகைகளில் வரவில்லை என்றால், நீங்கள் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், பெர்த்திற்கான முன்னுரிமையை அமைக்க ஒரு விருப்பம் உள்ளது. நீங்கள் முன்னுரிமையில் கீழ்  பெர்த்தை தேர்வு செய்தால், அதனை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ரயிலில் இத்தனை வசதிகள் அளிக்கப்படும்போது, அங்கு தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்படும். குறிப்பாக, நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. இவற்றை பற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால், கடுமையான அபராதத்துடன் சிறைத் தண்டனையையும் சந்திக்க வேண்டியிருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 4 முக்கிய விஷயங்களைப் பற்றி காணலாம். 

- ரயிலில் குப்பை போட்டால் சிறை தண்டனை
- ரயில் மேல் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது.
- தேவையில்லாமல் அலாரம் செயினை இழுக்கக்கூடாது.
- ரயிலில் பேனர், போஸ்டர் ஒட்டக்கூடாது.

மேலும் படிக்க | IRCTC விடுக்கும் எச்சரிக்கை... ‘இந்த’ தவறினால் வங்கிக் கணக்கு நொடியில் காலியாகலாம்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News