நீண்ட ஆயுளுக்கு..காலையில் எழுந்ததும் ‘இந்த’ 4 விஷயங்களை செய்யுங்கள்!

Tips for Longevity: பல நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசையா? அப்போ இந்த டிப்ஸை படித்து பயன்பெறுங்கள்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 3, 2023, 06:33 AM IST
  • நீண்ட ஆயுளுக்கான டிப்ஸ்
  • காலையில் எழுந்ததும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்.
  • கவலையுடன் உங்கள் நாளை தொடங்க வேண்டாம்.
நீண்ட ஆயுளுக்கு..காலையில் எழுந்ததும் ‘இந்த’ 4 விஷயங்களை செய்யுங்கள்! title=

நம்மில் பலருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அப்படி நீண்ட நாட்கள் வாழ என்ன செய்ய வேண்டும் என்ற ரகசியமும் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக சில சிம்பிளான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

காலை பழக்கங்கள்..

உங்கள் நாள் எவ்வாறு செல்கிறது என்பதை உங்கள் காலைப் பழக்கங்களை வைத்து கணிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பலருக்கு எழுந்தவுடன் மொபைலைச் பார்ப்பதே அவர்கள் அந்த நாளில் செய்யும் முதல் காரியமாக இருக்கலாம். பெரும்பாலான மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழாமல் இருப்பதற்கு இந்தப் பழக்கம் காரணமாக இருக்கலாம் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பிரபல ஆய்வு கட்டுரையில் ஆயுளை அதிகரிக்க செய்யும் காலை பழக்கங்களை பார்க்கலாமா? 

1.மனதையும் உடலையும் ஒருநிலை படுத்துதல்:

காலையில் எழுந்தவுடன் அன்றாட வேலைகளை பார்ப்பதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் 10-15 நிமிடங்களுக்கு மனதை அமைதிப்படுத்தி உடலையும் நம் எண்ண ஓட்டங்களையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும். அதன் பிறகு, உங்களை வளர்த்துக்கொள்ளும் வகையிலான ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும். அது, ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ளும் செயல்பாடாக இருக்கலாம். அல்லது உடற்பயிற்சி செய்வதாக இருக்கலாம். இப்படி உங்கள் நாளின் முதல் 30 நிமிடங்களை உங்களுக்காக நீங்கள் ஒதுக்கி கொள்ள வேண்டும். 

2.காலை உணவை தவிர்க்க வேண்டாம்:

7-8 மணி நேர தூக்கத்திற்கு பிறகு நாம் சாப்பிடும் முதல் உணவான காலை உணவினை எப்போதும் தவிர்க்க கூடாது. காலை உணவு, நம் உடலுக்கு சத்து கொடுக்கும், ஆற்றல் அளிக்கும் உணவாக இருப்பது சிறந்தது. இனிப்பு அள்ளது அதிக காரம் நிறைந்த உணவுகளை காலையில் தவிர்க்கலாம். 

மேலும் படிக்க | இந்த விதையோட தண்ணீர் நல்லதுனு நெனச்சு குடிச்சிடாதீங்க... அப்புறம் அவ்வளவுதான்

3.நீர்ச்சத்து:

காலையில் முதலில் உங்கள் உடலில் நீர்ச்சத்து நிறைந்திருப்பது அவசியமானது என்று வலியுறுத்துகின்றனர், மருத்துவ நிபுணர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் வயதாகும்போது உடலில் நீரேற்றத்தை இழக்க நேரிடும். அப்படி, நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது நமது கடமையாகும். நாள் முழுவதும் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள சில எலக்ட்ரோலைட் வகை பானங்களௌ உட்கொள்ள வேண்டும்.  பெர்ரி பழ வகைகள், புத்துணர்ச்சியூட்டும் வெள்ளரிகள் மற்றும் நீரேற்றத்திற்கு உதவும் முலாம்பழம் போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிட மறக்காதீர்கள்.

4.கவலையுடன் நாளை ஆரம்பிக்க வேண்டாம்:

காலையில் எழுந்து கொள்ளும் பாேது பலருக்கு “ஐயோ இதை செய்ய வேண்டுமே..அதை செய்ய வேண்டுமே..” என்ற கவலை ஆட்கொள்ளும். இதனால், பலருக்கு அந்த நாளை எதிர்கொள்ளவே தைரியம் இல்லாதது போல தோன்றும். ஆகவே, தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் நீங்கள் சிந்திக்கும் விஷயங்கள் பாசிடிவாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். “இந்த நாள் இனிய நாளாக இருக்கும். நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும். இந்த நாளை என்னால் எளிதில் கடந்து விட முடியும். என்ன நடந்தாலும் அது நல்லதற்கே..” போன்ற வாக்கியங்களை நீங்கள் உங்களது மனதிற்குள் சொல்லிக்கொள்ள வேண்டும். இது போன்ற எண்ணங்களால் உங்களது மன நிலை மாறும், உங்கள் ஒவ்வொரு நாளும் உண்மையாகவே இனிய நாளாக மாறும். 

மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறை நீங்க இந்த வீட்டு வைத்தியம் மட்டும் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News