ரயிலின் கடைசி பெட்டியில் X குறி ஏன் செய்யப்படுகிறது, அது தொடர்பான ரகசியத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மில்லியன் பயணிகள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். குமரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை ரயில் வழி பயணம் செய்வோர் இன்றும் இருக்கிறார்கள். நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். ஆனால், ரயில்களை பற்றிய அனைத்து ரகசியமும் நமக்கு தெரியாது. தொடர்வண்டிகளின் பயன்பாடு குறித்த பலரும் பலது அறிந்திருந்தாலும், ரயில்வே செயல்பாடுகளில் பின்பற்றப்படும் சில விஷயங்கள் இன்றும் நம்மை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன.


இந்தியன் ரயில்வே (INDIAN RAILWAYS) நாட்டின் லைஃப்லைன். இந்திய ரயில்வேயின் எதிர்காலத்திற்கான கூடுதல் திட்டமிடல், அதன் வரலாறு ஆழமானது. இந்திய ரயில்வே பற்றி நீங்கள் சொல்லக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. விதிகள் முதல் எண்களின் விதி வரை, ரயிலின் பெட்டிகளில் செய்யப்பட்ட மதிப்பெண்களின் ரகசியம், எவ்வளவு இருக்கிறது. இந்த ரகசியங்களில் ஒன்றை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். அது தான் 'X' குறியீடு.  


இந்தியாவில் மக்கள் பயணம் செய்யக்கூடிய எல்லா ரயில்களின் கடைசிப்பெட்டியில் 'X' என்ற குறியீடு மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும்.  ரயிலில் பயணம் செய்த அல்லது பயணம் செய்துகொண்டு இருக்கும் பலரும் 'X' என்ற குறியை கவனித்திருப்போம். ஆனால் இது எதை குறிக்கிறது, 'X' என்பதற்கான அர்த்தம் என்ன? என்ற சிந்தனை உங்களில் சிலருக்கு தோன்றியிருக்கும்.


ALSO READ | IRCTC இணையதளத்தில் புதிய மாற்றம்... இனி டிக்கெட் முன்பதிவு இன்னும் எளிது..!


அதற்கான அர்த்தம்.... "ஒரு ரயில் முழுமையடைந்த நிலையில் உள்ளது, அதில் எந்த பழுதோ அல்லது பிரச்சனையோ இல்லை என்பதை குறிக்க 'X' என்ற குறியீடு" பயன்படுத்தப்படுகிறது. ரயிலின் முன்பக்கத்தில் உள்ள எஞ்சின் தொடங்கி ரயிலின் எல்லா பெட்டிகள் மற்றும் அதனுடைய இயக்கத்திறனை ஆராய்ந்த பிறகே, 'X' என்ற குறியீடு ரயிலின் கடைசி பெட்டியில் வரையப்படுகிறது.


மேலும், அது ரயில்களின் இடைப்பட்ட பெட்டிகள் மற்றும் அதன் இணைப்புகளில் எந்தவிதமான பழுதோ, பிரச்சனையோ இல்லை என்பதையும் 'X' குறியீடு குறிக்கிறது. இதை தொடர்ந்து, இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும். தற்போது மின்சாரத்தால் இயங்கும் இந்த விளக்கு முன்பு எண்ணெய் கொண்டு ஒளிர்வூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ரயிலின் கடைசிப்பெட்டியில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவலும் உள்ளது. அது தான் 'LV' என்ற ஆங்கில வார்த்தைகளை தாங்கிய சிகப்பு நிற பலகை. கடைசிப்பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்படும் இருக்கும். இதற்கான அர்த்தம், ஒரு ரயில் பாதுகாப்பாக உள்ளது என்பதை துறை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிந்துக்கொள்ளவே 'LV' எழுத்துக்களை தாங்கி பலகைகள் மாட்டப்படுகின்றன.


ALSO READ | IRCTC ePayLater: பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!


ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும். இதற்காகத்தான் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும் போது முன்னும் பின்னும் அதிகாரி பரிசோதனை செய்து பச்சை நிற விளக்கை காட்டுகின்றனர்.  


மேலும், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பது குறித்து நிலைய அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கும் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தவும், அந்த வழித் தடத்தில் வரும் பிற ரயில்களையும் நிறுத்தவும் முடியும். எனவே, அடுத்தமுறை நீங்கள் ரயிலின் பயணம் செய்யும் போது, இந்த தகவல்களை ஒரு முறை சரிபார்த்து விட்டு, ரயிலேறுங்கள்.