ரயில் பயணிகளுக்கு Good News; ‘இந்த’ வழித்தடங்களில் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள்
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர் என்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான். ரயில்வேயின் தொழில்நுட்ப மேம்பாடுகள் மீது அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், அதிகவேக ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிவேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக உள்ள நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே தரப்பில் இருந்து விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு,கூடுதலாக அதிவேக வந்தே பாரத் ரயிகளை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்முறை, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே தரப்பில் இருந்து பெரிய மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களில் இந்த மாற்றம் நிகழப் போகிறது. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, மூன்று ரயில்களுக்கும் பதிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே தயாராகி வருகிறது. இந்த ரயில்களை வந்தே பாரத் ரயில்களாக மாற்றினால், பயணிகளின் பயண நேரம் முன்பை விட மிகவும் குறையும்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்படும்
ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அதிக வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கும் திட்டம் உள்ளது. இப்போது சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களின் பயணிகள் 'வந்தே பாரத்' என்ற அதிவேக ரயிலில் பயணிக்கும் போது, பயணம் முன்பை விட வசதியானதாகவும், நேரம் குறைவானதாகவு இருக்கும். அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
27 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்
வரும் காலங்களில் சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே தயாராகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதற்காக தற்போது 27 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில வழித்தடங்களும் வரும் காலத்தில் இறுதி செய்யப்படும்.
சதாப்திக்கு பதிலாக வந்தே பாரத் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும்
முதற்கட்டமாக டெல்லி-லக்னோ, டெல்லி-அமிர்தசரஸ், பூரி ஹவுரா உள்ளிட்ட 27 ரயில்வே வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்திருந்தார். இது தவிர, டெல்லி-போபால் மற்றும் டெல்லி-சண்டிகர் ரயில் பாதைகளில் இயக்கப்படும் சதாப்தி ரயில்களை மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையின் ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்களின் கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 2023க்குள் 75 ரயில்கள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IRCTC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22