கர்ப்பிணி பெண்ணின் மூலம், கருவில் இருந்த சிசுவுக்கும், 'கொரோனா' வைரஸ் பரவியுள்ள சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 நோய் தொற்று இல்லாத கர்ப்பிணிப் பெண்ணின் நஞ்சுக்கொடி மூலம் தனது குழந்தைக்கு வைரஸ் பரவுவது சாத்தியம் என்பதை புனே மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். புனே மருத்துவமனையில் நேர்மறையான பரிமாற்றத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட வழக்கு (தாயிடமிருந்து குழந்தைக்கு) இது. 


மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து, மருத்துவர்கள் கூறுகையில்... வழக்கமாக, ஒருவருடன் நெருங்கி பழகும் போது தான், மற்றவர்களுக்கு கொரோனா பரவுகிறது. அதாவது, பாலூட்டுவதல் உள்ளிட்டவை மூலம். ஆனால், கர்ப்பிணி பெண்ணின் மூலம், அவருடைய வயிற்றில் இருந்த சிசுவுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வகையில், வைரஸ் பரவும் சம்பவம் நடப்பது, நம் நாட்டில் முதல் முறையாகும். குழந்தைக்கு கர்ப்பிணியின் நச்சுக்கொடி வழியாக, சிசுவுக்கு வைரஸ் பரவியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன், அந்த பெண்ணுக்கு வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளது. ஆனால், கொரோனா பரிசோதனையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என அறிக்கைகள் வந்துள்ளது. 


ALSO READ | பெண் COVID-19 நோயாளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர்!


இதையடுத்து, குழந்தை பிறந்த உடனேயே பரிசோதனை செய்ததில், குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் உட்பட பிரச்னைகள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சைக்குப் பின், தாயும், சேயும் குணமடைந்து, வீடு திரும்பினர். தாய்க்கு வைரஸ் தொற்று இல்லாத நிலையிலும், தாயின் மூலம், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு வைரஸ் பரவலாம் என்பது, இதன் மூலம் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு வைரஸ் பரவுவது, நம் நாட்டில் முதல் முறையாக பதிவாகியுள்ளது.