இந்தியாவில் ரயில் போகுவரத்து மிக முக்கியமான போக்குவரத்து நெட்வொர்க்குகளின் முதலிடத்தை பிடித்துள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாட்டின் மூலை முடுக்குகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து ரயில்வே. தினமும் மில்லியன் கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணிக்கின்றனர். பயணம் செய்ய, மக்கள் கவுன்டர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட்டுகளை புக் செய்து பயணிக்கிறார்கள். அதில் ஒன்று IRCTC செயலி. ஐஆர்சிடிசி ஆப் மூலம் நீங்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்களா, இந்த செய்தி உங்களுக்கானது. அது குறித்து மிக முக்கிய எச்சரிக்கை செய்தி ஒன்றை IRCTC வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய மோசடியின் சிக்காமல் இருக்க எச்சரிக்கை


ரயில்வே புக்கிங் மூலம் இணைய மோசடியின் சிக்கி பயணிகள் பணத்தை இழக்காமல் இருக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலி  இணைப்புகளில் இருந்து வரும் போலியான தகவல்களைத் தவிர்க்க ஐஆர்சிடிசி ஆண்ட்ராய்டு பயனர்கள் கவனமாக  அதனை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   மோசடியான போலியான இணைய லிங்குகளை அனுப்புவதன் மூலம், போலியான IRCTC செயலியைப் பதிவிறக்க மக்களைத் தூண்டும் சைபர் கிரம் ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது IRCTC. இந்திய ரயில்வே தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும், மோசடிகளைத் தவிர்க்கவும் இந்திய ரயில்வே இந்த தகவலை வழங்குகிறது.


IRCTC செயலியை  பதிவிறக்கம் செய்யும் முறை


ஐஆர்சிடிசி செயலியைப் பதிவிறக்க, கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து செய்யலாம். பயனர்கள் ஏதேனும் மோசடியில் சிக்கினால், உடனடியாக Care@irctc.co.in என்ற முகவரிக்கு சென்று தகவல் தெரிவிக்கலாம். இருப்பினும், இந்த சூழலில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!


IRCTC ரயில் இணைப்பு மொபைல் செயலி


இந்த மோசடியைத் தவிர்க்க, ஐஆர்சிடிசி ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு மோனோபிளாக்கிங் தளமான ட்விட்டர் மூலம் அம்சங்கள் குறித்து எச்சரித்து வருகிறது. மோசடி குறித்து சந்தேகம் இருந்தால்,  இணைப்பை கிளிக் செய்யாமல் தவிர்த்து விடுமாறு ட்விட்டரில் கூறப்பட்டுள்ளது. இந்த செயலியை பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்ய முயற்சிக்கவும் என்றும் டிக்கெட் முன்பதிவுக்கு போலி மொபைல் செயலியை பயன்படுத்தினால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சைபர் மோசடி ஆசாமிகள் அபேஸ் செய்து விடுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது .


மோசடி இணைப்பை தவறுதலாக கூட கிளிக் செய்ய வேண்டாம்


நீங்கள் ஏதேனும் தவறான செயலியை பதிவிறக்கம் செய்தால், அதன் மூலம் சைபர் மோசடியில் சிக்க வாய்ப்பு உள்ளது என ஐஆர்சிடிசி அதன் பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. எனவே மெசேஜ் மூலம் கிடைக்கும்  இணைப்பை தவறுதலாக கூட கிளிக் செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் நீங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். IRCTC செயலியை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் இந்திய ரயில்வே அறிவுறுத்தி வருகிறது.


மேலும் படிக்க | Rail Coach Restaurant: பழைய ரயில் பெட்டியை உணவமாக மாற்றி அசத்தும் ரயில்வே!


இந்திய ரயில்வே


இந்திய ரயில்வேயின் சேவையையும் தரத்தையும் மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை தவறு நடக்கும் போதும், தீவிரமாக விசாரிக்கப்பட்டு, அவை மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.


மேலும் படிக்க | 44 நடைமேடைகள்... 67 ரயில்தடங்கள்... உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ