உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவில் தான் உள்ளது. உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை கர்நாடகாவில் உள்ள ஹுப்பள்ளி ரயில் நிலையம். ஹூப்ளி ரயில் நிலையத்தில் 1507 மீட்டர் நீள நடைமேடை உள்ளது. முன்னதாக, கோரக்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையாக இருந்தது. இப்போது இது இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம் என்று வரும் போது, கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், அந்த பட்டத்தை நீண்ட காலமாக தன்னிடம் வைத்துக் கொண்டு உள்ளது. இது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் 1903 முதல் 1913 வரை கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் 44 நடைமேடைகள் உள்ளன. இங்கு இரண்டு நிலத்தடி ரயில் நிலையங்களும் உள்ளன. 41 ரயில் தடங்கள் மேல் மட்டத்திலும், 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் உள்ளன.
44 நடைமேடைகளைக் கொண்ட ரயில் நிலையம்
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் இரண்டு நிலத்தடி நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையம் மேல் மட்டத்தில் 41 ரயில் தடங்களும், கீழ் மட்டத்தில் 26 ரயில் தடங்களும் உள்ளன. இந்த நிலையம் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் வழியாக தினமும் சராசரியாக 660 மெட்ரோ வடக்கு ரயில்கள் செல்கின்றன, மேலும் 1,25,000 பயணிகள் பயணிக்கின்றனர். உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமான இது, 1903 மற்றும் 1913 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. கனரக இயந்திரங்கள் இல்லாத காலத்தில் கட்டப்பட்டது. இந்த மிகப்பெரிய ரயில் நிலையத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
மேலும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத்... ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்?
ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் 19,000 பொருட்கள்
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19,000 பொருட்கள் காணாமல் போகின்றன. அனால், இவற்றில் 60 சதவீத பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு நிர்வாகத்தால் திரும்ப கண்டுபிடித்து வழங்கப்படுகின்றன. கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் மிகவும் பழமையானது. அமெரிக்காவில் ரயிலில் பயணம் செய்வது ஆடம்பரமாகக் கருதப்பட்ட நேரத்தில் இந்த முனையம் திறக்கப்பட்டது. இந்த முனையம் அமெரிக்காவின் மிகப்பெரிய போக்குவரத்து மையமாகும். மேலும் இது நியூயார்க்கில் பார்க்க ஒரு நல்ல இடம். டைம்ஸ் சதுக்கத்திற்குப் பிறகு இது மக்களை அதிகம் ஈர்க்கிறது.
ரகசிய நடைமேடை கொண்ட ரயில் நிலையம்
உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தில் ஒரு ரகசிய நடைமேடையும் உள்ளது. இது வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு கீழே உள்ள ரகசிய தளம். இந்த தளத்தை ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஹோட்டலை விட்டு வெளியேற பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்த ரகசிய தளம் வழக்கமான சேவைக்கு பயன்படுத்தப்படவில்லை.
இந்திய ரயில்வே பற்றிய சுவாரஸ்சியமான தகவல்கள்
உலக நாடுகளுக்குப் பிறகு, இந்தியா தற்போது ரயில்வே துறையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பாக, உத்திரபிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலைய சந்திப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயில் நிலையம் வழியாக குறைந்தது 3 வழித்தடங்கள் செல்லும் நிலையங்கள் ரயில் சந்திப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை உள்ளது. முன்னதாக இந்த சாதனை கரக்பூர் ஸ்டேஷன் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேவின் மிகப்பரிசு! மலிவாகப் பயணிக்க IRCTC இன் ஸ்பெஷல் பேக்கேஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ