Rice Diet myths, Diabetes : அரிசி உணவு தான் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களின் மூன்றுநேர உணவாக இருந்து வருகிறது. ஆனால், பிரதான உணவாக இருக்கும் இந்த அரிசி சாப்பாட்டால் தான் நீரிழிவு நோய் வருகிறது என அண்மைக்காலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உடல் எடை கூடுவதற்கும் அரிசி சாப்பாடே காரணம் என பலரும் சொல்வதால், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வீடுகளில் அரிசி சாப்பாடு சமைப்பது படிப்படியாக குறைந்து வருகிறது. சர்க்கரை நோய் பாசிடிவ் என வந்துவிட்டாலே அவர்களின் உணவுப் பட்டியலில் இருந்து காணாமல் போகும் முதல் உணவு அரிசி சாப்பாடு தான். இங்கு பலருக்கும் அரிசி சாப்பாட்டு மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட  இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், நிபுணர்களின் கருத்துப்படி அரிசி சாப்பாட்டை முற்றிலும் நீக்கிவிட வேண்டும், சாப்பிடவே கூடாது என்றெல்லாம் பரிந்துரைப்பதில்லை. நீரிழிவு நோய் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளவர்கள் உள்ளிட்டோர் அரிசி உணவை எடுத்துக் கொள்வதில், ஒரு அளவை பின்பற்ற வேண்டும் என்றே பரிந்துரைக்கிறார்கள். சமச்சீரான முறையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி, அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | பக்கத்து வீட்டுடன் சண்டையா... கடுபேத்துபவர்களை சமாளிப்பது எப்படி? நறுக்குனு நாலு டிப்ஸ்!


அரிசி உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள்


அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் இது எளிதில் ஜீரணமாககூடியது. அத்துடன் அரிசி உணவு உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். இது தவிர, அரிசியில் பச்சைய் இல்லை. அதேசமயம் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அரிசியில் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.


அரிசி சாப்பாடு உணவின் நன்மைகள்


அரிசி சாப்பாடு எளிதில் ஜீரணமாகும். இதனால், சீக்கிரம் உடலுக்கு தேவையான சத்துகள் ரத்தத்தில் இருந்து உறிஞ்சப்படுகின்றன. அதன் மூலம் உடல் செல்களுக்கு கடத்தப்படுவதும் விரைவாக நடக்கிறது. அதாவது, செரிமான பிரச்சனைகள் இல்லாமல் உடலுக்கு சீக்கிரம் ஆற்றலைக் கொடுக்கும் ஒரு உணவாக அரிசி உணவு இருக்கிறது. இதனை சமச்சீரான அளவில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான ஒன்று தான்.


அரிசியை எப்படியெல்லாம் சமைத்து சாப்பிடலாம்?


அரிசியை உலர் வறுத்தல் செய்து வைத்து சமைக்கலாம். தண்ணீரில் அதிக நேரம் ஊற வைத்து அதன்பிறகு சமைக்கலாம். அப்படி,சமைக்கும்போது கஞ்சி வடித்து அதனையும் குடிக்கலாம். இவற்றிலும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. பருப்பு, காய்கறிகளுடன் சேர்த்து கூட்டுச் சாப்பாடாகவும் அரிசியை சமைக்கலாம். இதுமட்டுமல்லாது இன்னும் பல வகைகளில் சுவைக்கு ஏற்ப அரிசியை சமைத்து சாப்பிடலாம். ஏற்கனவே கூறியதுபோல சமச்சீராக எடுத்துக் கொண்டால் கல்லீரலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? ‘இந்த’ உடல்மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ