பக்கத்து வீட்டுடன் சண்டையா... கடுபேத்துபவர்களை சமாளிப்பது எப்படி? நறுக்குனு நாலு டிப்ஸ்!

Lifestyle Tips: உங்களுக்கு பக்கத்து வீட்டினருடன் பிரச்னை இருக்கும்பட்சத்தில், இந்த நான்கு விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் அதற்கான தீர்வை பெற்று, சுமூகமான உறவை வைத்துக்கொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 24, 2024, 02:38 PM IST
  • பக்கத்து வீட்டுடன் சுமூக உறவில் இருப்பது பல விஷயங்களில் நல்லதாகும்.
  • பிரச்னையை ஆரோக்கியமான முறையில் தீர்ப்பது சிறந்தது.
  • பக்கத்து வீட்டுடன் பிரச்னையை வளர்த்துக்கொண்டே செல்வது நல்லதல்ல.
பக்கத்து வீட்டுடன் சண்டையா... கடுபேத்துபவர்களை சமாளிப்பது எப்படி? நறுக்குனு நாலு டிப்ஸ்!  title=

Lifestyle Tips In Tamil: நிச்சயம் நம்மில் ஒவ்வொருவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டையோ, நட்போ ஏதாவது ஒரு உறவு இருந்துகொண்டுதான் இருக்கும். கிராமப்பகுதிகளிலும் சரி, ஓரிரு நகரப் பகுதிகளிலும் சரி அண்டை வீட்டுக்காரர் உடனான உறவு என்பது அதிக பிணைப்புடன் இருக்கும். ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடலில் வருவது போல்,'பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்...' என்ற வரிகளுக்கு ஏற்பவே பல இடங்களில் அண்டை வீட்டுக்காரர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.

இருப்பினும், பெரும்பாலும் நகரப்பகுதிகளை பார்த்தோமானால் அண்டை வீட்டார் உடனான உறவு அந்தளவிற்கு இருக்காது எனலாம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த பழக்கவழக்கம் முற்றிலும் சிதைவடைந்திருப்பதாக மக்கள் பேசுவதையும் பார்க்க முடிகிறது. இது மிக மிக குறைவான எண்ணிக்கை உடையவர்களே. இந்த இரண்டு தரப்பை விட மற்றொரு தரப்புதான் அதிகமாக இருக்கும். அதாவது, அண்டை வீட்டுக்காரர்களை பார்த்தாலே இவர்களுக்கு ஆகாது. சொல்லப்போனால் இரு வீட்டுக்கும் நடுவே அமெரிக்கா - ரஷ்யாவை போல் பனிப்போர் நடந்துகொண்டிருக்கும். 

கடுப்பேற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள்

பனிப்போரிலும் கூட இரு வீடுகளில் பரஸ்பரம் உணவு பரிமாறிக்கொள்வார்கள், அந்த வீட்டு பிள்ளைகள் இணைந்து விளையாடிக்கொள்வார்கள், குறிப்பாக அந்த வீட்டு பிள்ளைகள் மட்டுமே இரு தரப்புக்கும் தூதர்களாக செயல்படுவார்கள். இப்படியான சூழலில் இருப்பவர்களை நாம் அதிகம் பார்க்க முடியும். இது குடும்பங்கள் இருக்கும் வீட்டில் மட்டுமின்றி, ஒரு வீட்டில் பேச்சிலர்கள், பக்கத்தில் ஃபேமிலியாக தங்கியிருந்தார் பிரச்னை இன்னும் ஜாஸ்தி.

மேலும் படிக்க | உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? ‘இந்த’ உடல்மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்!

நீங்கள் எதிர்பாலினத்தவர் ஒருவருடன் பேசுவதை பார்த்து பக்கத்து வீடுகளில் புரளி பேசும் ஆண்ட்டி தொடங்கி பல பேர் உங்களை கடுபேற்றுவார்கள். சத்தமாக பாட்டு கேட்கிறீர்கள், அடிக்கடி வீட்டில் இருந்து சத்தம் வருகிறது, தண்ணீர் மோட்டாரை இந்த நேரத்தில் போடாதீர்கள், வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வராதீர்கள் என பல கேள்விகளையும், பிரச்னைகளையும் ஒரு பேச்சிலர் அவர்களின் அண்டை வீட்டாரிடம் இருந்து சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளை வளர்த்துக்கொண்டு போவதை தவிர்த்து அதற்கு தீர்வு காண விளைவதே சரியானதாக இருக்கும் அல்லவா...

இந்த விஷயங்கள் முக்கியம்

அந்த வகையில், உங்களின் பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்னை என்றால் பின்வரும் சில விஷயங்களை செய்வதன் மூலம் அவர்களுடன் சுமூக உறவை மேற்கொள்ளலாம். 

- அடிக்கடி பார்க்கும்போது உங்களின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேச்சு கொடுங்கள். சாதாரணமாக இன்றி மனதார பேசுங்கள். பேச விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட வணக்கம் வைப்பதையாவது வழக்கமாக கொள்ளுங்கள். அப்படியிருந்தால் பிரச்னை ஏற்படும்போது, அவர்களுடன் பேசுவதற்கு தயக்கம் இருக்காது. அதேபோல், பிரச்னைகள் குறித்து பேசும் போது இனிமையாக அவற்றை முன்வையுங்கள், குற்றஞ்சாட்டும் விதமாக பேசிவிட வேண்டாம். 

- உங்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். எதிர்கால பிரச்னைகளை தவிர்ப்பதற்கு இது பயனளிக்கும்.

- பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் குறித்து உங்களிடமே புகார் தெரிவித்தால் அதை காது கொடுத்து கேளுங்கள். அந்த விஷயத்தில் அவர்களின் பார்வை என்ன என்பதை முழுவதுமாக கேட்ட பின்னர், அதுகுறித்த உங்களின் நிலைப்பாட்டை பொறுமையாக சொல்லுங்கள். பொறுமையாக கேட்பதால், நீங்கள் பேசுவதற்கும் எதிர்தரப்பு அனுமதிக்கும். 

- உங்கள் பக்கத்துவீட்டுக்காரருடன் பிரச்னையாக இருக்கிறது, நீங்கள் பேசியும் பயனில்லை என்றால் அங்கு மூன்றாவது தரப்பின் உதவியை நாடலாம். அதாவது, உங்கள் இருவருக்கும் பொதுவாக வீட்டில் அருகில் இருக்கும் நபரோ அல்லது அசோசியேஷன் தலைவரோ யாராவது ஒருவரை அழைத்து உங்கள் இருவரின் பிரச்னைகளையும் பேசி தீர்வு எட்டலாம். 

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சுமுகமான உறவை மேற்கொள்வது என்பது முக்கியமானது. ஆபத்து காலத்தில் இருந்து அனைத்திற்கும் யாரின் உதவியும் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம். பிரச்னையே இருந்தாலும் அவற்றை மறக்க நினைப்பதே நல்லதாகும்.

மேலும் படிக்க | ரன்னிங் இல்லை... ஜிம் இல்லை... 21 நாள்களில் உடல் எடையை குறைந்த மாதவன் - என்ன மேஜிக் தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News