ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆக இருக்கும். இருப்பினும், கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையாகும். கடந்த ஆண்டு, ஜூலை 31 ஆக இருந்த கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான புதிய ஐடிஆர் படிவங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. புதிய மதிப்பீட்டு ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும். ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் அடிப்படை விலக்கு வரம்புக்கு மேல் வருமானம் உள்ள இந்திய குடிமக்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். இருப்பினும், பழைய வரி முறையின் படி 5 லட்சம் ரூபாய் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள குடிமக்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. அதேபோல், புதிய வரி முறையின் படி, 7 லட்சம் ரூபாய் வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள குடிமக்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. 


ஐடிஆர் தாக்கல்: தேவையான ஆவணங்கள் 


- ஊதிய சீட்டுகள் (சேலரி ஸ்லிப்ஸ்)


- ஆதார் அட்டை, பான் கார்டு


- வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு பாஸ்புக், பிபிஎஃப் கணக்கு பாஸ்புக்


- முதலாளி / பணிபுரிந்த நிறுவனத்தால் வழங்கப்பட்ட படிவம்-16 அல்லது டிடிஎஸ் சான்றிதழ். இது ஒரு பணியாளருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அதில் கழிக்கப்பட்ட TDS பற்றிய விவரங்களை வழங்குகிறது.


- படிவம்-16A, தற்போதைய வரிச் சட்டங்களின்படி குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் நிலையான வைப்புத்தொகைகள், தொடர் வைப்புத்தொகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட வட்டி போன்ற சம்பளத்தைத் தவிர மற்ற கொடுப்பனவுகளில் TDS கழிக்கப்பட்டால்.


 - நீங்கள் ஒரு சொத்தை விற்றிருந்தால், வாங்குபவரிடமிருந்து படிவம்-16B, (உங்களுக்கு செலுத்தப்பட்ட தொகையில் கழிக்கப்பட்ட TDSஐ இது காட்டும்).


- வாடகைக்கு இருக்கும் நபரிடமிருந்து பெறப்பட்ட படிவம்-16C (நீங்கள் பெற்ற வாடகையில் கழிக்கப்பட்ட TDS பற்றிய விவரங்களை வழங்குவதற்காக)


- படிவம் 26AS - உங்கள் ஒருங்கிணைந்த வருடாந்திர வரி அறிக்கை. உங்கள் பான் எண் தரவுகளின் படி, டெபாசிட் செய்யப்பட்ட வரிகள் பற்றிய அனைத்து தகவல்களும் இதில் இருக்கும்.


a) உங்கள் முதலாளி / நிறுவனத்தால் கழிக்கப்பட்ட TDS
b) வங்கிகளால் கழிக்கப்படும் TDS
c) உங்களுக்குச் செலுத்தப்பட்ட கட்டணங்களிலிருந்து வேறு ஏதேனும் நிறுவனங்களால் கழிக்கப்படும் TDS
d) நீங்கள் டெபாசிட் செய்த அட்வான்ஸ் டேக்ஸ்
e) நீங்கள் செலுத்திய சுய மதிப்பீட்டு வரிகள்


- வரி சேமிப்பு முதலீட்டு சான்றுகள்


- பிரிவு 80D முதல் 80U வரை விலக்குகளை கோருவதற்கான சான்றுகள் (சுய மற்றும் குடும்பத்திற்கான சுகாதார காப்பீட்டு பிரீமியம், கல்வி கடனுக்கான வட்டி)


- வங்கியிலிருந்து பெறப்பட்ட வீட்டுக் கடன் அறிக்கை.
 
மேலும் படிக்க | வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி: இந்த படிவங்கள் முக்கியம்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ 



 


ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி


ஸ்டெப் 1: வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலான https://www.incometax.gov.in/iec/foportal/ -க்கு செல்லவும். 


ஸ்டெப் 2: உங்கள் பயனர் ஐடி (PAN), கடவுச்சொல், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழைந்து 'லாக்-இன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
 
ஸ்டெப் 3: 'e-File' மெனுவைக் கிளிக் செய்து, 'Income Tax Return' இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 
ஸ்டெப் 4: 'Continue' என்பதைக் கிளிக் செய்யவும்
 
ஸ்டெப் 5: ஆன்லைன் ஐடிஆர் படிவத்தில் பொருந்தக்கூடிய மற்றும் கட்டாயமான அனைத்து இடங்களையும் நிரப்பவும்.
 
ஸ்டெப் 6: 'Taxes Paid and Verification' டேபில் பொருத்தமான சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
 - நான் e-Verify  செய்ய விரும்புகிறேன்.
- தாக்கல் செய்த நாளிலிருந்து 120 நாட்களுக்குள்  e-Verify செய்ய விரும்புகிறேன்.
- நான் e-Verify செய்ய விரும்பவில்லை. கையொப்பமிடப்பட்ட ITR-V ஐ சாதாரண அல்லது வேக அஞ்சல் மூலம் "மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம், வருமான வரித்துறை, பெங்களூரு - 560 500" என்ற முகவரிக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து 120 நாட்களுக்குள் அனுப்ப விரும்புகிறேன்.
 
ஸ்டெப் 7:  'Preview and Submit' பொத்தானைக் கிளிக் செய்து, ITR இல் உள்ளிடப்பட்டுள்ள எல்லா தரவையும் சரிபார்க்கவும்.
 
ஸ்டெப் 8: ஐடிஆர்-ஐ ‘சம்பிட்’ செய்யவும்.
 
ஸ்டெப் 9: 'I would like to e-verify' என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்தால், EVC/OTP கேட்கப்படும்போது, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி e-verify செய்யலாம்.
 
ஸ்டெப் 10: EVC/OTPஐ 60 வினாடிகளுக்குள் உள்ளிட வேண்டும், அல்லது வருமான வரி அறிக்கை (ITR) தானாகச் சமர்ப்பிக்கப்படும். சமர்ப்பிக்கப்பட்ட ITR-ஐ 'My Account > e-Verify Return' விருப்பத்தைப் பயன்படுத்தி அல்லது CPCக்கு கையொப்பமிடப்பட்ட ITR-Vஐ அனுப்பி பின்னர் சரிபார்க்கப்பட வேண்டும்.


மேலும் படிக்க | நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை நிறைக்கும் புதிய வரி விதிப்பு முறை - நிர்மலா சீதாராமன்