கொரோனா தொற்றுநோயின் இந்த இக்கட்டான காலத்தில், நாடு சுகாதாரம் மற்றும் பொருளாதார மட்டத்தில் போராடிக்கொண்டு இருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை கோவிட் -19 நிவாரணத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி நெருக்கடியால் போராடும் மக்கள் ரீசார்ஜ் செய்வது கடினமாக உள்ளது. ஆகையால், இந்த நிறுவனங்கள் குறைந்த வருமானம் கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களுக்காக இலவச ரீசார்ஜ் மற்றும் பல நன்மைகளை வழங்கியுள்ளன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.


BSNL-ன் சலுகை:
அரசு நிறுவனமான BSNL கொரோனா காலத்தில் ஒரு சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் திட்டம் உடைய வாடிக்கையாளர்களுக்கு மே 31 வரையிலான இலவச செல்லுபடி கிடைக்கும். கோவிட் -19 மற்றும் டவ்-தே புயலால் பாதிக்கப்பட்டவர்களும், ஏப்ரல் 1 க்குப் பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களும் மே 31 வரையிலான இலவச செல்லுபடியைப் பெறுவார்கள். இதனுடன், பயனர்களுக்கு 100 நிமிட இலவச டாக் டைமும் வழங்கப்படுகிறது. இதனுடன், ரூ .107, ரூ 197 மற்றும் ரூ .397 திட்டங்களிலும், இலவச செல்லுபடி மற்றும் 100 நிமிடங்களுக்கான காலிங் ஆகியவை கிடைக்கின்றன.


Jio சலுகை:
ஜியோபோன் பயனர்களுக்கு கோவிட் நிவாரண சலுகையை Jio அறிவித்தது. இதில், பயனர்களுக்கு 300 நிமிட இலவச காலிங் மற்றும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை தரவு என இரண்டு புதிய திட்டங்கள் உள்ளன. தொற்றுநோய் காலத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்காக நிறுவனம் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சலுகையில், ஜியோ தனது பயனர்களுக்கு தினமும் 10 இலவச நிமிடங்களை அளிக்கிறது. இது குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு பயனளிக்கும். இது தவிர, பை-ஒன்-கெட்-ஒன்-னின் கீழ் ரூ .39 மற்றும் ரூ .69 ப்ரீபெய்ட் திட்டங்களையும் நிறுவனம் வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் 14 நாட்கள் செல்லுபடியாகும் தரவு மற்றும் அழைப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் ஒரு திட்டத்தை வாங்கினால், ​​அதே விலை மதிப்பிலான மற்றொரு திட்டத்தை இலவசமாகப் பெறுவார்கள்.


ALSO READ: COVID-19 நெருக்கடியில் உதவ முன்வந்த Vi: 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ், double talktime


Airtel சலுகை:
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் (Airtel), குறைந்த வருமானம் கொண்ட ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ .49 ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100 எம்பி தரவு, 38 ரூபாய் மதிப்பிலான டாக் டைம், ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தவிர, நிறுவனத்தின் 79 ரூபாய் திட்டத்தில் இரட்டை சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் 128 ரூபாய்க்கான டாக் டைம், 200MB வரை தரவு ஆகியவை கிடைக்கின்றன. திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


Vodafone Idea சலுகை:
Vodafone Idea குறைந்த வருவாய்  கொண்ட தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ .49 இலவச ப்ரீபெய்ட் ரீசார்ஜை வழங்கியுள்ளது. மேலும் இரட்டை நன்மை திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ .49 ப்ரீபெய்ட் திட்டத்தில் 100 எம்பி தரவு, 38 ரூபாய்க்கான டாக் டைம் ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 79 ரூபாய் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு இரட்டை சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 64 + 64 அதாவது 128 ரூபாய் டாக் டைம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 200MB தரவு கிடைக்கும். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ALSO READ: இலவச ரீசார்ஜ் வழங்கும் Airtel, புதிய பேக் அறிமுகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR