Jio-வின் நம்ப முடியாத சலுகைகள்: வெறும் ரூ.39-ல் வரம்பற்ற தரவு, இலவச அழைப்பு வசதி

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்ய முடியாத பயனர்களுக்காக இந்த இலவசம் சலுகை வழங்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2021, 03:18 PM IST
  • ரிலையன்ஸ் ஜியோ ரூ .100 க்கும் குறைவான பல மலிவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ரூ .69 மலிவு திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 அதிவேக தரவு கிடைக்கிறது.
  • ஜியோவின் ரூ .39 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
Jio-வின் நம்ப முடியாத சலுகைகள்: வெறும் ரூ.39-ல் வரம்பற்ற தரவு, இலவச அழைப்பு வசதி title=

தனது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில், ரிலையன்ஸ் ஜியோ ரூ .100 க்கும் குறைவான பல மலிவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு மிக முக்கிய நிறுவனமான ரிலயன்ஸ் ஜியோ, ஜியோபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக பல சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் சலுகைகளை கொண்டுவந்துள்ளது. ஜியோ புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு வெறும் ரூ .39 மற்றும் ரூ .69 என விலையை நிர்ணயித்துள்ளது.

ஜியோவின் ரூ 39 திட்டம்

ஜியோவின் (Jio) ரூ .39 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும், இதில் தினசரி 100 எம்பி அதிவேக தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் 14 நாட்களுக்கான செல்லுபடி ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 100 எம்பி தரவு கிடைக்கும் என்பதால், மொத்தமாக, இந்தத் திட்டம் 1400 எம்பி அதிவேக தரவை வழங்குவதாகக் கொள்ளலாம். 100 MB என்ற தினசரி தரவு ஒதுக்கீட்டை நீங்கள் உபயோகித்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

ALSO READ: COVID-19, உதவ முன்வந்த Airtel: இலவச பேக்குகள், தடுப்பூசி பதிவு, இன்னும் பல சலுகைகள்

ஜியோவின் ரூ .69 திட்டம்

ஜியோ தனது மற்றொரு மலிவு திட்டத்தை வெறும் ரூ .69 க்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 அதிவேக தரவு கிடைக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் மொத்தம் 7 ஜிபி அதிவேக தரவு கிடைக்கும். பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் 14 நாட்களுக்கான செல்லுபடி ஆகிய நன்மைகளையும் இந்த திட்டத்தில் பெறுகிறார்கள். அதிவேக தரவுகள் தீர்ந்துவிட்டால், பயனர்கள் 64 Kbps வேகத்தில் இணையத்தைப் (Internet) பயன்படுத்த முடியும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு சலுகைகளைத் தவிர, ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மாதத்திற்கு 300 நிமிட அவுட்கோயிங் கால்களையும் இலவசமாக வழங்குகிறது. கொரோனா தொற்றுநோய்க்கு (Coronavirus) மத்தியில் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்ய முடியாத பயனர்களுக்காக இந்த இலவசம் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 10 நிமிட இலவச காலிங்கைப் பெறுகிறார்கள். ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஜியோ இந்த முயற்சியை அறிவித்தது.

ALSO READ: COVID-19 நெருக்கடியில் உதவ முன்வந்த Vi: 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ், double talktime

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News