இந்திய விமான துறையில் 70,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 70,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையமானது ஓய்வு பெற்றவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, Inquiry Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Degreeஅல்லது ஏதேனும் ஒரு Master Degree அல்லது ஏதேனும் ஒரு Professional Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது PSUs அரசு அலுவலகங்களில் Vigilance துறையில் Group-A Officer அல்லது அதற்கு நிகரான பதவிகளில் பணிபுரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
மேலும் படிக்க | சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.70,000வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
மேலும் படிக்க | JOB ALERT: 10வது பாஸ் ஆனவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 25500 சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை:
Inquiry Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Empanelment_of_retired_officers.pdf என்ற தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து மேற்கூறிய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு ஜூலை 17ஆம் தேதிக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR