தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு வனத்துறை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DEO, Accountant, Junior Consultant, Economics Professional பதவிக்கு என மொத்தமாக 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலிப் பணியிட விவரம்:
தற்போது தமிழக வனத்துறை வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், கீழுள்ள பதவிகளுக்கு என்று மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
System Analyst/ IT Manager – 01
Computer Operator Grade I – 01
Data Entry Operator – 01
English to Tamil Translator – 02
Junior Consultant – 01
Expert in Carbon Sequestration – 01
Forestry Expert Agroforestry – 01
Economics Professional – 01
Marketing Expert – 01
Accountant – 01
மேலும் படிக்க | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
கல்வித் தகுதி:
System Analyst / IT Manager பணிக்கு Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Operator Grade I பணிக்கு Bachelor Degree in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
English to Tamil Translator பணிக்கு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் Proficiency in operation of computer தெரிந்திருக்க வேண்டும்.
English மற்றும் Tamil மொழிகளில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
Junior Consultant பணிக்கு PhD / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Expert in Carbon Sequestration பணிக்கு PhD / Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Forestry Expert Agroforestry பணிக்கு Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Economics Professional பணிக்கு Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D முடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Marketing Expert பணிக்கு Master’s degree / Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accountant பணிக்கு CA / ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
தமிழக வனத்துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள்வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
System Analyst/ IT Manager பணிக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Computer Operator Grade I பணிக்கு ரூ.28110/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Data Entry Operator பணிக்கு ரூ.25320/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
English to Tamil Translator பணிக்கு ரூ.15000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Junior Consultant பணிக்கு ரூ.60000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Expert in Carbon Sequestration பணிக்கு ரூ.60000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Forestry Expert Agroforestry பணிக்கு ரூ.60000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Economics Professional பணிக்கு ரூ.35000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Marketing Expert பணிக்கு ரூ.35000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Accountant பணிக்கு ரூ.55000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக வனத்துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://www.forests.tn.gov.in/pages/view/tn-forest-news என்ற தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 07.07.2022 அன்று மாலை 4.00 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR