மனிதனுக்கு வேலை என்பது அத்தியாவசியமான ஒன்று. ஒருவன் எடைப்போடப்படுவதும் அவன் செய்யும் வேலையை வைத்துதான். அதனால் பலரும் நிரந்தரமான ஒரு வேலைக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பலர் அரசாங்க வேலைக்கென தீவிரமான முயற்சி செய்வதும் வழக்கம். அதற்காக பலர் பல அறிவிப்புகளை உற்று நோக்கியிருப்பார்கள். தற்போது அப்படிப்பட்டவர்களுக்கு அருமையான வேலை செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft


அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Paediatrician காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலி பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Paediatrician பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree, D.M, DNB, M.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,700 முதல் ரூ.1,67,400வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | M.com, MBA முடித்தவர்களுக்கு Netflix-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://drive.google.com/file/d/122WWdjT_jNTPSybkrRA5ZlRMVSADIs-0/view என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு மற்றும் spchcttd@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2022ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ


மேலும் படிக்க | இந்திய தபால் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்: 98000 காலியிடங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ