EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ

EPFO e-nomination benefits: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல வசதிகளைப் பெறுகின்றனர். இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தபடி வசதியாக பணிகளை செய்ய ஈ-நாமினேஷன் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 03:35 PM IST
  • பணியாளர் ஓய்வூதியத் திட்டம் ஈ-நாமினேஷன்.
  • ஈ-நாமினேஷனில் யார் கிளெயிம் செய்யலாம்?
  • ஈ-நாமினேஷனை எவ்வாறு தாக்கல் செய்வது?
EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ title=

பணியாளர் ஓய்வூதியத் திட்டம் ஈ-நாமினேஷன்: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதன் விதிகளைத் தொடர்ந்து தளர்த்துகிறது. சிறிது சிறிதாக அனைத்து செயல்முறைகளும் ஆன்லைனில் மாறிவிட்டன. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல வசதிகளைப் பெறுகின்றனர். இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தபடி வசதியாக பணிகளை செய்ய ஈ-நாமினேஷன் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையின் மூலம், ஒரு உறுப்பினர் தனது குடும்ப உறுப்பினரை ஆன்லைன் போர்ட்டலிலேயே நாமினியாக நியமிக்கலாம்.

ஈ-நாமினேஷனில் யார் கிளெயிம் செய்யலாம்? 

இபிஎஃப்ஓ சந்தாதாரர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால், அவரது மரணத்துக்கு பிறகு, அவர் நியமனம் செய்த நாமினி, வீட்டில் இருந்தபடியே ​​ஈ-நாமினேஷனை நிரப்பி வருங்கால வைப்பு நிதி (பிராவொடெண்ட் ஃபண்ட்), ஓய்வூதியம் (இபிஎஸ்-ஓய்வூதியம்) மற்றும் EDLI இன்சூரன்ஸ் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இபிஎஃப்ஓ வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 சுஷாந்த் காண்ட்வால் கருத்துப்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (இபிஎஃப்) மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்) ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக நாமினியை நியமிக்க வேண்டும். இதற்குப் பிறகு, நாமினி மேலே உள்ள அனைத்து திட்டங்களிலும் உரிமை கோரலாம்.

இபிஎஃப், இபிஎஸ், இலவச காப்பீடு ஆகியவற்றின் நன்மைகள்

முன்பை விட நாமினேஷன் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. நியமனத்தில், பெற்றோர், மனைவி, உடன்பிறந்தவர்கள் அல்லது குடும்பத்தின் தகுதியுள்ள உறுப்பினர் போன்ற குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். இது நாமினியின் பெயர் மற்றும் விவரங்களைக் கொண்டிருப்பதால், பணியாளரின் மரணம் ஏற்பட்டால், வருங்கால வைப்பு நிதிப் பணம் (PF), ஓய்வூதியப் பணம் (EPS நிதி) அல்லது EDLI இன்சூரன்ஸ் பணத்தை பெறுவது எளிதாகிறது. இபிஎஃப்ஓ -இலிருந்து கிடைக்கும் காப்பீட்டில் அதிகபட்ச வரம்பு ரூ. 7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாமினேஷ செய்தால் மட்டுமே கிளெயிம் செய்ய முடியும்

காண்ட்பாலின் படி, முதல் நியமனத்திற்கு, பணியாளர் படிவம்-2 ஐ பூர்த்தி செய்து ஹார்ட் காப்பியாக இபிஎஃப்ஓ ​​அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இப்போது கணக்கு வைத்திருப்பவர், இ-சேவா போர்ட்டலில் வீட்டில் இருந்தபடியே குடும்ப உறுப்பினரின் ஈ-நாமினேஷனை தாக்கல் செய்யலாம். ஓய்வூதியம் மற்றும் இறப்பு கோரிக்கை தீர்வுக்கு ஈன்-நாமினேஷன் அவசியம். இது தொடர்பாக இபிஎப்ஓ சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதுவரை, 8.50 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில், 28 ஆயிரம் கணக்குதாரர்கள் மட்டுமே இ-நாமினேஷன் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு 3 பம்பர் பரிசுகள், கணக்கில் வரும் கூடுதல் தொகை

ஈ-நாமினேஷனின் நன்மைகள் என்ன?

- இபிஎஃப்ஓ அலுவலகத்திற்குச் செல்லும் தொல்லை இல்லை.

- கூடுதல் ஆவணங்களின் தேவை இனி இல்லை.

- குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாமினியாக பரிந்துரைக்கப்படலாம். அவர்களுக்கு சமமான தொகை கிடைக்கும்.

- நாமினியை எந்த நேரத்திலும் மாற்றலாம். புதிய உறுப்பினர் சேர்க்க முடியும்.

- பணியாளரின் மரணத்திற்குப் பிறகு, நாமினி ஈ-நாமினேஷன் மூலம் ஆன்லைனில் உரிமை கோரலாம்.

ஈ-நாமினேஷனை எவ்வாறு தாக்கல் செய்வது?

- உறுப்பினர் இ-சேவா போர்டல் www.unifiedportal-mem-epfindia.gov.in க்குச் செல்லவும்.

- UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். 

- 'வியூ ப்ரொஃபைல்' என்ற விருப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்றவும்.

- 'மேனேஜ் செக்ஷன்' என்ற பகுதிக்குச் சென்று 'ஈ-நாமினேஷன்'-ல் கிளிக் செய்யவும்.

- நாமினி பெயர், ஆதார் எண், புகைப்படம், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளிடவும்.

- அடுத்த பக்கத்தில், E-Sign ஐ கிளிக் செய்து, ஆதார் மூலம் OTP ஐ உருவாக்கவும்.

- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

- உங்கள் மின்-நாமினேஷன் தாக்கல் செய்யப்படும்.

மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News