இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியக் கடற்படை, கடற்படை கப்பல் யார்டு, போர்ட் பிளேயர், பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது. 2022-க்கான நேவல் ஷிப் யார்ட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பில் சேர ஆர்வமுள்ளவர்கள், வேலைவாய்ப்பு செய்தி வெளியிடப்பட்ட முதல் தேதியை (19 பிப்ரவரி 2022) தவிர்த்து, 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட / ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | Naukri தளத்தில் அதிக WFH வேலைகளை தேடிய இந்தியர்கள்!
சம்பளம்:
நிலை-5 (ரூ 29200-92300)
தகுதிகள்:
1) மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான இடத்தில படித்திருக்க வேண்டும்.
2) பார்மசி சட்டம் 1948 இன் பிரிவு 31 அல்லது பிரிவு 32-ன் ஷரத்து (c) கீழ் சான்றிதழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
பணிகள்:
1) மருந்தை சேமித்து வைக்க வேண்டும்.
2) மருந்து விநியோகம் / வெளியீடு போன்றவற்றை செய்ய வேண்டும்.
3) பதிவுகளை கவனமாக பராமரிக்க வேண்டும்.
4) இன்டென்ட் செய்ய வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
1) ப்ரொவிஷனல் அப்பாயின்மென்ட் லெட்டர் - தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பணி நியமனம் தகுதி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும். மருத்துவப் பரிசோதனை மற்றும் பிற தேவைகளுக்கு நபர்கள் உட்படுத்தப்பட்டு, இந்திய அரசு மற்றும் நியமன ஆணையத்தால் சரிபார்ப்பு செய்யப்படும்.
2) டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் - வயது, கல்வி, அடையாளம், முகவரி, சாதி, சேவை போன்ற அனைத்து தொடர்புடைய ஆவணங்களும், DoP&T கொள்கையின்படி பணி நியமனங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். ஆவண சரிபார்ப்புக்கான தேதி மற்றும் இடம் ஆகியவை தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும், அந்த கடிதங்கள் அவை விண்ணப்பதாரர்களின் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலமாகவோ அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை இணைக்க வேண்டும். மேலும் விண்ணப்பமானது A4 அளவு சாதாரண பேப்பரில் நேர்த்தியான கையெழுத்துடனோ அல்லது டைப் செய்தோ இருக்கவேண்டும். அதன் பின்னர் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
கொமடோர் கண்காணிப்பாளர், (Oi/C ),
கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் முற்றம் (PBR),
அஞ்சல் பெட்டி எண். -705,
ஹடோ,
போர்ட் பிளேர்-744102”,
தெற்கு அந்தமான்,
அந்தமான் & நிக்கோபார் தீவுகள்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR