புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அல்லது ஏதேனும் காரணத்தால் ரத்து செய்ய வேண்டியிருந்தால், ரயில் கட்டண பணத்தைத் திரும்பப்பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அது நடக்காது. இப்போது ரயில்வே உடனடி திரும்புவதற்காக ஒரு புதிய சேவையை வழங்குகிறது. IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) IRCTC-iPay என்ற பெயரில் தனது சொந்த பேமெண்ட் கேட்வேயை அறிமுகப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சேவை (IRCTC iPay App) ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இதன் கீழ், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் ஒரு வங்கியின் கட்டண கேட் வே போல் செய்யப்படுகிறது. இது நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது மற்றும் டிக்கெட் ரத்து செய்யப்பட்டவுடன், அதன் பணத்தைத் திரும்பப்பெறுதலில் (IRCTC iPay Refund Status),உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். IRCTC iPay மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான முழு செயல்முறையையும் (IRCTC iPay Ticket Booking Process) தெரிந்து கொள்ளலாம்.


ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


ஐஆர்சிடிசி ஐபே ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை


1. iPay மூலம் முன்பதிவு செய்ய, முதலில் www.irctc.co.in என்ற வலைதளத்தில் உள்நுழைக.


2. இப்போது இடம் மற்றும் தேதி போன்ற பயணம் தொடர்பான விவரங்களை நிரப்பவும்.


3. இதற்குப் பிறகு,  ரயிலைத் தேர்ந்தெடுக்கவும்.


4. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​பணம் செலுத்தும் முறையில் முதல் ஆப்ஷனாக 'IRCTC iPay' கிடைக்கும்.


5. இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, 'பே அண்ட் புக்' என்பதைக் கிளிக் செய்யவும்.


6. இப்போது கட்டணம் செலுத்த  கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது UPI விவரங்களை செலுத்துவதற்கு நிரப்பவும்.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


7. இதற்கு பிறகு உங்கள் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்படும், அதனை உறுதிபடுத்தும் உங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் கிடைக்கும்.


8. மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எதிர்காலத்தில் நீங்கள் டிக்கெட்டுகளை மீண்டும் பதிவு செய்தால், நீங்கள் கட்டண விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டியதில்லை, உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.


 ஐஐசிடிசியின் IRCTC iPay என்னும்  பேமெண்ட் கேட்வே முற்றிலும் பாதுகாப்பானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


ALSO READ | LPG Booking: சிலிண்டரை புக் செய்யும் ஸ்மார்ட்டான வழிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR