புதுடெல்லி: ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். வெற்றியைப் பெற கடுமையாக உழைக்கிறார்கள். தொழில் ரீதியாக, ஒரு வெற்றிகரமான நபராக இருக்க, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ, அளவுக்கு வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். வாஸ்துவின் சாஸ்திரப்படி, நீங்கள் சில விஷயங்களை கடைபிடித்தார், நீங்கள் வெற்றி பெறுவது எளிது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாஸ்து சாஸ்திரத்தில், (Vastu Sastra)  வீட்டில், அலுவகத்தில் கம்யூட்டரை வைக்க வேண்டிய சரியான திசை பற்றி கூறப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் கம்யூட்டரை சரியான திசையில் வைத்திருந்தால், உங்களை வெற்றியை யாரும் தடுக்க முடியாது.


- தொழில் ரீதியாக வாழ்க்கையில் வெற்றியைப் பெற, வடக்கு திசையில் கம்யூட்டரை வைப்பது மிகவும் நன்மை பயக்கும்.  இந்த திசையில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாகவே, பிற விஷயங்களிலோ குழப்பத்தில் வாழ்பவர்களுக்கு அல்லது அவர்களின் தொழில் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாதவர்களுக்கு குழப்பம் நீங்கவும், தெளிவான முடிவு எடுக்கவும் உதவும்.


-  படிக்கும் குழந்தைகள், வீட்டில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை, அதை தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் கணினிகள் இருந்தால், படிப்பதில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் கவனம் சிதறாமல் படிப்பார்கள். 


- கணினியை,  கலை, இசை அல்லது அது தொடர்பான விஷயங்களுக்கு  வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் போது, கிழக்கு,  வடகிழக்கு திசை மிகவும் நல்லது. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினி, நடனம் அல்லது பாடுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அல்லது அதில் தொழில் ரீதியாக வெற்றி பெற விரும்புவோருக்கு மிகவும் நன்மை பயக்கும்.


- ஆன்மீகம் அல்லது தொடர்புடைய துறையில் செய்பவர்கள், கணிணியை, தெற்கு திசையில் வைத்தால் மிகவும் நல்லது. இந்த திசை நிம்மதியையும், ஆக்கபூர்வமான சிந்தனையையும் தருகிறது, இது அனைவருக்கும் அவசியம்.


ALSO READ | Vastu Tips: ஷூ தானே என நினைக்க வேண்டாம்.. இதனாலும் பாதிப்பு ஏற்படலாம்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR