Vastu Tips: ஷூ தானே என நினைக்க வேண்டாம்.. இதனாலும் பாதிப்பு ஏற்படலாம்..!!

ஷூ தானே என சாதாரணமாக எண்ண கூடாது. உங்கள் அதிர்ஷ்டத்தை கெடுத்துவிடும். அதனால், சில நேரங்களில் காலணிகளும் உங்கள் அதிர்ஷ்டத்தை எப்படி மாற்றியமைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2021, 06:46 PM IST
  • காலணிகள் அல்லது செருப்புகளை அவ்வப்போது பாலிஷ் செய்து எப்போதும் பளிச்சென்று பராமரிக்கப்பட வேண்டும்.
  • அலுவலகத்தில் பழுப்பு நிற காலணிகளை அணிவது பெரும்பாலும் வேலையில் தடைகளை ஏற்படுத்தக் கூடும்.
  • சமையலறையில் அணிய துணி செருப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
Vastu Tips: ஷூ தானே என நினைக்க வேண்டாம்.. இதனாலும் பாதிப்பு ஏற்படலாம்..!! title=

Vastu Tips : எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் அவர்களின் வெற்றி மற்றும் தோல்விக்கு வழிவகுக்கும் பல விஷயங்கள் உள்ளன.  நாம் சாதாரணமாக நினைக்கும் காலணிகள் கூட நமது அதிர்ஷ்டத்தை கெடுத்துவிடும். சில நேரங்களில் காலணிகளும் கூட உங்கள் அதிர்ஷ்டத்தை எப்படி மாற்றியமைக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் ஜாதகத்தின் எட்டாவது வீடு கால்களுடன் தொடர்புடையது. காலில் காலணிகளும் எட்டாவது வீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்த வகையான காலணிகளை அணிய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சில நேரங்களில் காலணிகள் உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றியமைக்கலாம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. ஒருபோதும் யாருக்கும் பரிசாக கொடுக்க வேண்டாம். காலணிகளை யாருக்கும் பரிசாகவோ அல்லது வேறு விதமாகவோ யாருக்கும் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.

2. ஒருபோதும் பழைய மற்றும் கிழிந்த காலணிகளை அணிய வேண்டாம். கிழிந்து, மிக பழைய காலணிகளை அணிந்து, வேலைக்கு செல்லக்கூடாது. இது உங்களுக்கு தோல்வியைத் தரும்.

ALSO READ | Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சி பொங்க உதவும் வாஸ்து குறிப்புகள்..!!!

3. அலுவலகத்திலோ அல்லது பணியிடத்திலோ பழுப்பு நிற காலணிகளை அணிவது பெரும்பாலும் வேலையில் தடைகளை ஏற்படுத்தக் கூடும்.

4. காலணிகள் அல்லது செருப்புகளை அவ்வப்போது பாலிஷ் செய்து எப்போதும் பளிச்சென்று பராமரிக்கப்பட வேண்டும். இது உங்கள் ஆளுமையை மேம்படுத்தி கம்பீரமான தோற்றத்தை தரும்.

5. பலருக்கு அவர்கள் வெளியில் இருந்து வந்து உடன், காலணிகளை அதற்கான இடத்தில் வைக்காமல், தங்கள் காலணிகளையும் செருப்பையும் அங்கும் இங்கும் வீசும் பழக்கம் உண்டு. அத்தகையவர்களுக்கு எதிரிகள் மிகவும் தொந்தரவு அதிகம் இருக்கும். வேலையிலும்  தடைகள் உண்டாகும்.

6. வீட்டில் காலணிகளுக்கு தனி இடம் ஒதுக்கவும். ஒருபோதும் செருப்பு அணிந்து பூஜை அறைக்குள் அல்லது சமையலறைக்குள் செல்லக் கூடாது.

7. வேண்டுமென்றால், சமையலறையில் அணிய துணி செருப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

வாஸ்து சாஸ்திரப்படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வைப்பதற்கு, தெற்கு, தென்மேற்கு, வடமேற்கு அல்லது மேற்கு திசை ஆகியவை சரியாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் பொருத்தமான இடத்தில் ஒரு ஷூ ரேக் செய்து, அதில் காலணிகளை வைக்கவும். அதற்கு கதவு இருந்தால் இன்னும் நல்லது.

ALSO READ | Vastu Tips: உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News