பிரபல நடிகையான சன்னி லியோனின் பெயர் தனியார் கல்லூரி ஒன்றின் சேர்க்கைப் பட்டியலில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் இளங்கலைப் படிப்பில் சேர்வதற்கான மாணவர் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பிரபல பாலிவுட் நடிகை, சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று தனது இணையத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து, இளங்கலை ஆங்கிலப் படிப்பிற்கு விண்ணப்பித்த, கல்வித் தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் 12- ஆம் வகுப்பில் நான்கு பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து முதலிடத்தில் இருந்தார் சன்னி லியோன். இது பெரும் அதிர்வலைகளை இணையத்தில் உண்டாக்கியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், "வேண்டுமென்றே யாரோ தவறாக இந்தத் தகவல்களைப் பதிவிட்டுள்ளனர். நாங்கள் அதை மாற்றச் சொல்லிவிட்டோம். இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்." என்றனர்.


இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து சன்னி லியோன் கருத்து பதிவிட்டுள்ளதாவது.... "உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்கிறேன், எனது வகுப்பில் நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் என நம்புகிறேன்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். 



ALSO READ | தனது VIDEO மூலம் ரசிகர்களை கிறங்கடிக்கும் அஞ்சனா சிங் -Watch


கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்த பூட்டுதலுக்கு மத்தியில், சன்னி லியோன் தனது புதிய நிகழ்ச்சியான 'லாக் அப் வித் சன்னி' ஆன்லைனில் தொடங்கியுள்ளானார். இந்நிகழ்ச்சியில், சன்னி புதிய விருந்தினர்களுடன் நேரலைக்குச் சென்று, அவர்கள் தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றி விவாதிக்கின்றனர். பிரபல புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானி, நடிகை டெய்ஸி ஷா, ஜியோர்ஜியா ஆண்ட்ரியானி ஆகியோருடன் அவர் உரையாடினார், அடுத்தது 'MTV' VJ மற்றும் 'ஸ்ப்ளிட்ஸ்வில்லே' தொகுப்பாளரான ரன்விஜய் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதற்கிடையில், சமூக தூரத்தை பராமரிக்க ரசிகர்களை சன்னி லியோன் மற்றும் டேனியல் வெபர் வலியுறுத்துகின்றனர். உண்மையில், அவர் தனது குழந்தைகளுக்கு - நிஷா கவுர் வெபர், ஆஷர் மற்றும் நோவா ஆகியோருக்கு கொரோனாவின் போது முகமூடி அணிவது குறித்து பயிற்சி அளித்த்து வருகிறார்.


கடந்த பிப்ரவரி 2019- இல், பீகாரில் நடைபெற்ற ஜூனியர் எஞ்ஜினியர் (JE) பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலில் சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.