இந்துக்களின் முக்கியமான விழாவான விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi)  பண்டிகை ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இந்தியாவின் பல மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர போராட்டக் காலத்தில், மக்களிடையே ஒற்றுமையும் தேசிய உணர்வும் வளர ஊர்வலமாக கொண்டாட தொடங்கப்பட்ட கணபதியின் பிறந்தநாள் அதன்பிறகு நாடு முழுவதும் களைக்கட்டத் தொடங்கின. இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட  காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகர் எடுத்த முன்முயற்சியே இன்றைய விமரிசையான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு காரணம். 


தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் (Lord Ganesh) சிலைகள் நிறுவி பூஜைகள் செய்கின்றனர். விநாயகருக்கு பிடித்தமான அவல், கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது. மண்ணால் ஆன விநாயகர் சிலையை பூஜை செய்த பிறகு, அதன்பிறகு 3வது நாள் அல்லது 5வது நாள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி கொண்டாட இத்தனை நிபந்தனைகளா? காவல் துறையின் பாதுகாப்பு வழிமுறைகள்!


இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலைகள் அமைத்து கோலாகலமாக கணபதி பூஜையை செய்கின்றனர். விநாயகர் உற்சவம் தொடங்குவதற்குக் பல மாதங்களுக்கு முன்னரே நகரிலுள்ள சிற்பக் கலைஞர்கள், கணபதியின் விதவிதமான சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை பல்வேறு சங்கங்கள் மற்றும் பந்தல்களுக்கு அனுப்புகின்றனர்.


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின்போது, பொது மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமலும் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படாமலும் இருக்க, நிகழ்ச்சி அமைப்பாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.



சந்திராயன் தீம் விநாயகப் பந்தல்


சமீப காலங்களில் தீம் சார்ந்த கொண்டாட்டங்கள் ஒரு பெரிய ஈர்ப்பாக மாறி வருகிறது. இந்த ஆண்டு, சந்திரயான்-3 என்ற விசயம், மிக முக்கியமான கருப்பொருளாக மாறிவிட்டது.  


ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி விழாவில், ஒரு பூஜை பந்தலின் மேல் சந்திரயான் ராக்கெட்டின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது. பந்தலின் உள்ளே, விநாயகப் பெருமானின் சிலை சந்திரனின் மேற்பரப்பில் ஒரு பெரிய படத்தின் முன் ஒரு மேடையில் வைக்கப்பட்டுள்ளது, தூரத்தில் பூமி தெரியும்.


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்கு மோதக நைவேத்தியம்! தொந்தி பிள்ளையாருக்கு ராகிக் கொழுக்கட்டை


இது மாம்பழத்திற்காக தம்பி முருகனுடன் போட்டி போட்ட விநாயகரின் கதையையும் சொல்வதாக உள்ளது. ஆனால், உண்மையில், லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியோரின் படங்களும் பின்னணியை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது சந்திரயான் கருப்பொருள் என்பது உறுதியாகிறது.


சந்திரனின் மேற்பரப்பில் விநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை பார்ப்பதற்கே கம்பீரமாக உள்ளது. சந்திரனுக்கு பயணமான சந்திரயானின் பயணத்தைக் காட்டுவதற்காக, பந்தலின் மேல் வைக்கப்பட்டுள்ள ராக்கெட்டின் 'த்ரஸ்டர்'களில் இருந்து புகை வெளியேறும். திருவிழாவின் கருப்பொருள் நாமும் பயணிக்கலாம் என்ற பொருள் தரும்‘பரி திதே பரி’.


“இந்த ஆண்டு நமது கணேஷ் பூஜை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) குழுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை அடைந்தது” என்று இந்த விநாயகர் சிலையை ஏற்பாடு செய்த பண்டால் கமிட்டியினர் கூறுகின்றனர். 


இதேபோல, சந்திரயான் 2 பயணத்தை காட்டும் வகையில் பல பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாகுயாட்டியில் உள்ள விஐபி சாலைக்கு அருகில் உள்ள பூஜைக் குழுவும் அதன் கணேஷ் பூஜை பந்தலைப் பயன்படுத்தி இஸ்ரோவின் சாதனையைக் காட்டியுள்ளது. 


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்! ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


https://english.cdn.zeenews.com/static/public/zee-tamil.jpg?fbclid=IwAR1TvddD30roRevDe1Ja7XgjDATFsQcfviJXwZ8BStvv2lVnhQ4sjk5DGFc