ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் 24 மிகவும் சிறப்பான நாள். இன்று புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மீனத்தில் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. மார்ச் 15 அன்று சூரியன் மீன ராசிக்குள் நுழைந்தார். இப்போது, மார்ச் 24, அதாவது இன்று புதன் மற்றும் சூரியன் இணையவுள்ளார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டு கிரகங்களும் ஏப்ரல் மாதம் வரை ஒன்றாகவே இருக்கும். மீனத்தில் புத ஆதித்ய யோகம் அமைவது 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.


ரிஷபம்
புத ஆதித்ய யோகம் அமைவதால் ரிஷப ராசிக்காரர்களின் தினசரி வருமானம் கூடும். மேலும், வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் மாதம் முழுவதும் பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரிகள் சிறப்பான பொருளாதார பலன்களைப் பெறுவார்கள்.


மிதுனம்
சூரியன் மற்றும் புதனின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் அதிக பலன் அடைய வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வருமானமும் கூடும். இந்த காலத்தில் தவிர திடீர் பண ஆதாயம் உண்டாகும்.


மேலும் படிக்க | சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறவுள்ளது, அடிக்கும் ஜாக்பாட் 


கடகம்
இந்த ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் அதிர்ஷ்டமாக அமையும். சூரியன் மற்றும் புதன் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வரவிருக்கும் 15 நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.


கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் அதிகப்படியான பலன்களைத் தரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். பிறருடன் கூட்டு சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் இருந்து பலமான பொருளாதார பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வழி அமையும். நல்ல மனிதர்களை சந்திப்பது சாத்தியமாகும்.


கும்பம்
மீனத்தில் உருவாகும் புத ஆதித்ய யோகத்தால் கும்ப ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள், சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மேஷ ராசிக்குள் நுழையும் ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR