மகா சிவராத்திரி 2022: சிவலிங்க பூஜையில் மறந்தும் இந்த பொருட்களை பயன்படுத்தாதீர்கள்
Maha Shivratri 2022: பங்குனி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மகா சிவராத்திரி 2022: இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனினும் பங்குனி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2022 மார்ச் 01 அன்று வருகிறது. இந்நாளில் ருத்ராபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டால், வேண்டுதல்கள் நிறைவேறும். மேலும், சிவலிங்கத்துக்கு விசேஷ பொருட்களைக் கொண்டு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்தால், நோய்கள் தீரும், சகல செல்வங்களும் கிட்டும். எனினும், சிவ பெருமானின் அபிஷேக ஆராதனையில் பயன்படுத்தக்கூடாத சில பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மகாசிவராத்திரி அன்று சிவலிங்க பூஜையில் இவற்றை பயன்படுத்த வேண்டாம்
- மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்தின் மீது துளசி இலைகளை அர்ச்சனை செய்யக்கூடாது.
- இந்த நாளில் சிவலிங்கத்திற்கு பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட அல்லது பாக்கெட் பால் கொண்டு அபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- சிவலிங்கத்தின் மீது சூடான பால் கொண்டு அபிஷேகம் செய்யக்கூடாது, குளிர்ந்த பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- சிவபெருமானுக்கு சம்பா எனப்படும் ஈழத்தலரி அல்லது கெண்டி பூக்களைக் கொண்டு பூஜை செய்யக்கூடாது.
- சிவலிங்கத்தின் மீது உடைத்த அரிசியாலான அட்சதையை போடக்கூடாது.
- கிழிந்த வில்வ இலைகளை அர்ச்சனை செய்யும்போது பயன்படுத்தக்கூடாது.
மேலும் படிக்க | முக்கண்ணனுக்கு கண்ணை அர்ப்பணித்த கடவுள் விஷ்ணுவின் கோரிக்கை பின்னணி!
மகாசிவராத்திரி அன்று அபிஷேகம் செய்வது எப்படி?
சாஸ்திரங்களின்படி, முதலில் சிவலிங்கத்தின் மீது பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பால், கங்கை நீர், குங்குமப்பூ, தேன் மற்றும் தண்ணீர் கலந்து அபிஷேகம் செய்யலாம். மகாசிவராத்திரியில் நான்கு பிரகார பூஜை செய்பவர்கள், முதல் பிரகாரத்தில் நீர் கொண்டும், இரண்டாவது பிரகாரத்தில் தயிர் கொண்டும், மூன்றாவது பிரகாரத்தில் நெய் கொண்டும், நான்காவது பிரகாரத்தில் தேன் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மகா சிவராத்திரி 2022 பூஜைக்கான நல்ல நேரம்
இம்முறை மஹாசிவராத்திரிக்கான மங்களகரமான நாள் மார்ச் 1 செவ்வாய்கிழமை அன்று அதிகாலை 3.16 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த புண்ணிய காலம், அதாவது சதுர்த்தசி திதி மார்ச் 2ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி வரை இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR