புதுடெல்லி: மஹிந்திரா ஸ்கார்பியோ N எஸ்யூவி வாகனம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்காக, நிறுவனம் இந்திய சந்தையில் SUVவின் புதிய தலைமுறை காரை வெளியீடும் தேதியை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய SUV 2022 ஜூன் 27  அன்று Scorpio N என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் இந்த புதிய கார் உடன் ஏற்கனவே சந்தையில் உள்ள தற்போதுள்ள மாடல் எஸ்யூவியின் விற்பனையும் தொடரும்.


தற்போதைய மாடலின் விற்பனை Scorpio Classic என்ற பெயரில் தொடரும் என ஸ்கார்ப்பியோ நிறுவனம் அறிவித்துள்ளது.  சூப்பர் பவருடன் எஸ்யூவியை ஓட்ட விரும்பும் இளம் மற்றும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. 


புதிய ஸ்கார்பியோ அட்டகாசமன வடிவமைப்பு மற்றும் கமாண்டிங் டிரைவிங் பொசிஷனுடன் வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.


மேலும் படிக்க | 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்


SUV களின் ராஜா
2022 ஸ்கார்பியோவின் டீசரை வெளியிடும் போது, ​​மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் SUVயின் பிக் டாடி (Big Daddy of SUVs) என்ற டேக்லைனை வழங்கியுள்ளது. புதிய Scorpio N உடன் நிறுவனம் பல புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்கியுள்ளது.


இந்த மேம்பட்ட அம்சங்கள், தற்போதைய மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. இதுதொடர்பாக மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் விஜய் நக்ரா கூறுகையில், “மஹிந்திராவின் ஒரு முக்கிய மாடல் ஸ்கார்பியோ. இது ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய பிராண்டாக மாறியுள்ளது. அனைத்து புதிய ஸ்கார்பியோ N மீண்டும் SUV பிரிவில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்கும் எங்கள் நோக்கத்தையும் புதிய Scorpio நிறைவேற்றுகிறது” என்று தெரிவித்தார்.


பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் 
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்களுடன் வெளியாகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் எஞ்சின்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர, புதிய எஸ்யூவி, 4 பை 4 விருப்பத்துடன் வழங்கப்படும். 


மேலும் படிக்க |  குறைந்த விலையில் Ola S1 Pro வாங்க வாய்ப்பு


2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் மற்றும் XUV700 ஆகியவற்றின் வரிசையில், 2022 Scorpio N ஆனது வலுவான வாடிக்கையாளர் தேவையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


புதிய ஸ்கார்பியோவிற்கு நீண்ட காத்திருப்பு நேரம் இருக்கும், ஏனெனில் சப்ளை செயின் மற்றும் செமிகண்டக்டர் சிப் நெருக்கடி வாகனத் துறையில் இருப்பதால், புதிய வாகனம் வெளியிடப்பட்டாலும், வாங்குவதற்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற சூழ்நிலையில்,  தேவைக்கு ஏற்ப வழங்கல் என்பது சற்றே சிக்கலாக இருக்கலாம். 


மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR