Tasks for September Month: செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம், நிதி நிலை தொடர்பான பணிகளின் பார்வையில் மிக முக்கியமான மாதமாக உள்ளது. இந்த மாத இறுதிக்குள், உங்கள் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் நீங்கள் முடிக்க வேண்டும். நீங்கள் இந்த 5 முக்கியமான நிதி பணிகளை முடிக்கவில்லை என்றால், அதற்காக நஷ்டஈடு செலுத்த வேண்டியிருக்கும். இந்த அபராதத்தைத் தவிர்க்க, இந்த ஐந்து பணிகளையும் செப்டம்பர் மாதத்தில் நீங்கள் முதலில் முடித்து விட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரி தாக்கல்


நீங்கள் வரி செலுத்தும் அளவு வருமானம் பெறும் நபராக இருந்தால், இந்த மாதம் வரி அடிப்படையில் மிக முக்கியமானதாக இருக்கும். 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் (ITR Filing) செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர் 2021 ஆகும். தொற்றுநோய் காரணமாக, வருமான வரி தாக்கல் தேதி ஜூலை 31-லிருந்து செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 க்கு பிறகு நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தால், 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். எனினும், உங்கள் வருடாந்திர சம்பளம் ரூ .5 லட்சத்தை விட அதிகமாக இல்லாமல் இருந்தால், உங்களுக்கு ரூ .1,000 க்கு மேல் அபராதம் விதிக்கப்படாது. (புகைப்படம்: பிடிஐ)


ஆட்டோ டெபிட் பரிவர்த்தனை


அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 2021 முதல், உங்கள் வங்கியில் இருந்து ஆட்டோ டெபிட் வசதியைப் பெற இரண்டு காரணி அங்கீகாரம் (Two Factor Aunthentication) தேவைப்படும். ஆகையால், உங்கள் வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். மியூசுவல் ஃபண்ட் SIP க்கு ஆட்டோ டெபிட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பணத்தை கழிப்பதற்கு முன், செய்தி அல்லது பிற வழிகளில், 5 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது பரிவர்த்தனைக்கு 24 மணி நேரத்திற்கு முன்போ வங்கி வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். (புகைப்படம்: எஸ்பிஐ கார்டு)


ALSO READ: வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம்: ITR Filing-க்கான இந்த காலக்கெடு நீட்டிப்பு


டிமேட் கணக்கின் KYC


டிமேட் (Demat Account) அல்லது டிரேடிங் கணக்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் தங்கள் KYC செயல்முறையை முடிக்குமாறு வைப்புத்தொகையாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது செய்யப்படாவிட்டால், கணக்கை டீஆக்டிவேட் செய்வதில் சிக்கல் இருக்கலாம். (புகைப்படம்: ஜீ பிசினஸ்)


ஆதார்-பான் இணைப்பு


பான் கார்டுடன் உங்கள் ஆதார் கார்டை (Aadhaar Card) நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றால், கண்டிப்பாக செப்டம்பர் 30 க்கு முன் இந்த வேலையைச் செய்யுங்கள். காலக்கெடுவிற்குள் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கவில்லை என்றால், அவை செயலிழந்துவிடும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத எந்த பான் கார்டும் வேலை செய்யாது. வங்கிக் கணக்கைத் திறக்க பான் கார்டு வைத்திருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது


ஆதார்-பிஎஃப் கணக்கு இணைப்பு கட்டாயமாகும்


உங்கள் PF கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால், செப்டம்பர் முதல் உங்கள் வருங்கால வைப்பு நிதிக்கு உங்கள் பங்களிப்பை நீங்கள் அளிக்க முடியும். இதற்கு, உங்கள் ஆதார் அட்டையை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும். செப்டம்பர் 30 க்கு முன் உங்கள் ஆதார் மற்றும் பிஎஃப் கணக்கை இணைக்கவில்லை என்றால், ஊழியர் மற்றும் முதலாளியின் பங்கை பிஎஃப் -ல் டெபாசிட் செய்ய முடியாது.


ALSO READ: Aadhaar Card: ஒரே இணைப்பிலிருந்து எளிதாக பதிவிறக்கலாம், முழு செயல்முறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR