ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதில் பெரிய நிவாரணம், விரைவில் அறிவிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான முக்கிய காலக்கெடுவை நீட்டிக்கக்குடும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2021, 04:05 PM IST
  • CBDT வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான முக்கிய காலக்கெடுவை நீட்டிக்கக்குடும்.
  • வரி செலுத்தும் பலர் ஐடிஆர் ரிட்டன்களை தாக்கல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
  • தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் வருமான வரி தாக்கலுக்கான புதிய போர்ட்டலை உருவாக்கியுள்ளது.
ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதில் பெரிய நிவாரணம், விரைவில் அறிவிப்பு title=

புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான முக்கிய காலக்கெடுவை நீட்டிக்கக்குடும். தற்போது, ​​நடப்பு நிதியாண்டு 2021 க்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக உள்ளது.

முன்னதாக இந்த காலக்கெடு 31 ஜூலை 2021 க்குள் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் அதன் காலக்கெடு 30 செப்டம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் (Income Tax Department) புதிய வலைத்தளம் துவக்கத்தில் இருந்தே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதற்குப் பிறகு, அரசாங்கத்தின் கண்டிப்பான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு, இந்த வலைத்தளத்தை உருவாக்கிய நிறுவனமான இன்போசிஸ் புதிய ஐடிஆர் போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தது. ஆனால் இன்னும் வரி செலுத்தும் பலர் ஐடிஆர் ரிட்டன்களை தாக்கல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வருமான வரி தாக்கல் வேகமாக நடக்கிறது

நீண்ட இடைநிறுத்தத்திற்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமான ஐடிஆர் ரிட்டர்ன்கள் தாக்கல் (ITR Filing) செய்யப்படுகின்றன. இப்போது இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோர் ஐடிஆர் ரிட்டன்களை தாக்கல் செய்ய போதுமான நேரம் கிடைக்கும் வகையில், மத்திய அரசு முக்கிய ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ALSO READ: ITR Filing FY 2020-21: ITR தாக்கல் செய்யும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் செக்லிஸ்ட்

ஐடிஆர் ரிட்டர்ன் தாக்கல் தேதி

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்திகளின்படி, வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிக்க அரசு (Central Government) தயாராகி வருகிறது. புதிய போர்ட்டலில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், தேதிகளின் நீட்டிப்பு வரும் நாட்களில் அறிவிக்கப்படக்கூடும். அப்படி நடந்தால், வரி செலுத்துவோருக்கு ஐடிஆர் ரிட்டன்களை தாக்கல் செய்ய போதுமான நேரம் கிடைக்கும்.

இன்போசிஸ் புதிய போர்ட்டலை உருவாக்கியுள்ளது

தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் வருமான வரி தாக்கலுக்கான புதிய போர்ட்டலை உருவாக்கியுள்ளது. அதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஐடிஆர் இணையதளம் ஜூன் 7 அன்று தொடங்கப்பட்டது.

முன்னதாக வருமான வரி தாக்கலுக்கான இணையதள முகவரி incometaxindiaefiling.gov.in ஆக இருந்தது. இது தற்போது தற்போது incometax.gov.in ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் துவக்கத்தில் இருந்தே, வரி செலுத்துவோர் புதிய போர்ட்டலில் பல சிரமங்களை எதிர்கொண்டனர். 2021 ஆம் நிதியாண்டிற்கு (FY21) இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான ITR கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதிய போர்ட்டலில் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன

வருமான வரி 2.0 (Income Tax 2.0) போர்ட்டலில் பல புதிய கட்டண முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோர் இந்த இணையதளத்தில் நெட் பேங்கிங், யுபிஐ, கிரெடிட் கார்டு, ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎஃப்டி மூலம் பணம் செலுத்த முடியும். பணம் அவர்களது கணக்கில் இருந்து நேரடியாக கழிக்கப்படும்.

இது இது தவிர, புதிய தளத்தில் வருமான வரி ரிட்டர்ணின் செயலாக்கமும் வேகமாக இருக்கும். இதனால் வரி செலுத்துவோருக்கும் உடனடியாக ரீபண்டு கிடைத்துவிடும். இருப்பினும், புதிய வலைத்தளம் அறிமுகம் ஆனதிலிருந்து பல தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ALSO READ: ITR: வருமான வரி தாக்கல் செய்வதில் நீடிக்கும் சிக்கல்; காலக்கெடு நீட்டிக்கப்படுமா..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News