Maruti Suzuki கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி
மாருதி சுசுகி கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, கார்களை வாங்க நிதி உதவிபெற முடியும்!!
மாருதி சுசுகி கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, கார்களை வாங்க நிதி உதவி (Car Finance) பெற முடியும்!!
மாருதி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் என்ற மாருதி சுசுகியின் (Maruti Suzuki) ஆன்லைன் நிதி உதவி வசதி ஒரு டிஜிட்டல் தளமாகும். இதை வாடிக்கையாளர்கள் அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலிருந்தும் அணுக முடியும்.
வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வகையான விருப்பங்களை வழங்கும்போது, அதில் பல வசதிகளையும் அனுமதிப்பதே இந்த ஆன்லைன் நிதி விருப்பத்தின் முக்கிய குறிக்கோள் என்று மாருதி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இப்போது வாடிக்கையாளர்கள் (Car Buyers) நிதி கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பது, தங்களுக்கு ஏற்ற கடன் வசதியைத் தேர்ந்தெடுப்பது, நிதி தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது, ஆன்லைன் பயன்முறையில் கடன் தொகையை பெறுவது ஆகியவற்றுக்கு மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸின் உதவியைப் பெறலாம்.
ALSO READ: Cheapest Cars: 3 லட்சத்துக்கும் குறைவான விலையில் கார் வாங்க சூப்பர் வாய்ப்பு!!
இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க திட்டமிட்டுள்ள வாகனங்களின் மதிப்பீட்டையும் எளிதாகப் பெறலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால், இணை விண்ணப்பதாரர் நிதியுதவியையும் அவர்கள் தேர்வு செய்யலாம்.
மாருதி சுசுகி இந்தியாவின் மூத்த நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா, டிஜிட்டல் இயங்குதளங்கள் (Digital Platforms) வசதிக்கான முக்கிய அம்சமாக உள்ளது என்று கூறுகிறார்.
இது குறித்து தெரிவித்த அவர், “மாறிவரும் வாடிக்கையாளர் போக்கை கருத்தில் கொண்டு, மாருதி சுசுகி ஸ்மார்ட் பைனான்சை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். இது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தீர்வை அளிக்கும் நிதியுதவியை வழங்கும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் தளமாகும்” என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறினார்.
"நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, பல முதன்மையான தொழில்துறை அம்சங்களை நாங்கள் இந்த தளத்தில் சேர்த்துள்ளோம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: ரூ. 50 ஆயிரத்துக்கு மாருதி Wagon R காரை வாங்கலாம் -முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR