8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்கவும், பணவீக்கத்தை எதிர்கொள்ளவும், நாட்டின் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரி 2023 -ல் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அடுத்ததாக, ஜூலை 2023 -ல் மீண்டும் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில், அடுத்த ஊதியக்குழு அதாவது 8 ஆவது ஊதியக்குழு அமைப்பது குறித்த ஒரு மிகப்பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் இருந்தாலோ, இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமான செய்தியாக இருக்கும். சமீப காலங்களில் அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் மூன்று முக்கிய கோரிக்கௌகளை வைத்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 8 ஆவது ஊதியக்குழுவை கொண்டு வர வேண்டும் ஆகியவை இந்த முக்கிய கோரிக்கைகளாகும். 


இவற்றில் தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. மேலும், இது உத்தரவாத ஓய்வூதியம் கிடைப்பதற்கான வழிவகைகளையும் அரசு மும்முரமாக செய்து வருகிறது. இதேபோல் அரசு ஊழியர்களை மகிழ்விக்க 8 ஆவது ஊதியக்குழுவையும் கொண்டு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


எட்டாவது ஊதியக் குழுவை நாடு முழுவதும் அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என்ற ஊகங்கள் உள்ளன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 8வது ஊதியக்குழுவுக்கு மோடி அரசு விரைவில் கிரீன் சிக்னல் கொடுக்கக்கூடும். எட்டாவது ஊதியக் குழு இந்த ஆண்டிலேயே அதாவது 2023 இல் அமைக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. முதலில் DA அதிகரிப்பு, இப்போது HRA..


2013-ம் ஆண்டு 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் அரசு ஊழியர்கள் அடுத்த ஊதியக்குழுவிற்காக காத்திருக்கிறார்கள். புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் ஊழியர்களுக்கு பெரிய பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.


44% ஊதிய உயர்வு


8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், இம்முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கப்படும். அதனால் ஊழியர்களின் சம்பளம் 18 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரமாக உயரும்.


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது


2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்.. 3 நாட்களில் மிகப்பெரிய நற்செய்தி, காத்திருக்கும் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ