7th Pay Commission: அடி தூள்.. 3 நாட்களில் மிகப்பெரிய நற்செய்தி, காத்திருக்கும் ஊழியர்கள்

7th Pay Commission: ஜூலை மாதத்திற்கான ஆவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 27, 2023, 02:28 PM IST
  • இப்போது 42 சதவிகித அகவிலைப்படி கிடைக்கிறது.
  • மே AICPI தரவு ஜூன் 30 அன்று வரும்.
  • தரவுகளை வெளியிடுவது யார்?
7th Pay Commission: அடி தூள்.. 3 நாட்களில் மிகப்பெரிய நற்செய்தி, காத்திருக்கும் ஊழியர்கள் title=

ஜூலை அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் அதிகரிப்பு இந்த முறை செப்டம்பர் அல்லது அக்டோபர் 2023 இல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1 ஜூலை 2023 முதல் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும். முன்னதாக மார்ச் 2023 இல், ஜனவரி 2023 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கிறது. ஜூலை மாதத்திற்கான ஆவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அறிவிக்கப்படும். ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு ஏற்கனவே வெளியாகிவிட்டது. மே மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு ஜூன் 30 அன்று வரும்.

இப்போது 42 சதவிகித அகவிலைப்படி கிடைக்கிறது

ஜூலை 1, 2023 முதல் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கப்படும்? இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மே மாதத்தின் ஏஐசிபிஐ குறியீட்டு தரவு வந்த பிறகு, அதில் இன்னும் தெளிவு கிடைக்கும். தற்போது அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது ஜனவரி 2023 முதல் அமல்படுத்தப்பட்டது. மே மாத புள்ளிவிவரங்களும் வந்தவுடன், 7வது ஊதியக் குழுவின் கீழ் ஜூலையில் எவ்வளவு அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பது தெளிவாகிவிடும்.

மே தரவு ஜூன் 30 அன்று வரும்

ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு, ஜனவரி முதல் ஜூன் 2023 வரை AICPI குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படும். புதிய அகவிலைப்படிக்கான ஏஐசிபிஐ குறியீட்டின் புதிய கணக்கீடு ஜூன் 30 மாலை வரும். இம்முறை அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது இதிலிருந்து தெரியவரும்? ஏப்ரல் எண்ணிக்கை ஏற்கனவே 134.2 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் அகவிலைப்படி 45.04 சதவீதத்தை எட்டியுள்ளது. இம்முறை இது 45.5% -க்கு மேல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | 7th Pay commission ஊழியர்களுக்கு அட்டகாசமான இரட்டை மகிழ்ச்சி: டிஏ உடன் இதுவும் உயரும்

தரவுகளை வெளியிடுவது யார்?

ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு எவ்வளவு உயர்த்தும் என்பது  முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்கள் மற்றும் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொகை எவ்வளவு அதிகரிக்கும்

தற்போது ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 எனில், அவருக்கு 42 சதவீத அகவிலைப்படி அதாவது ரூ. 7,560 கிடைக்கும். ஆனால் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்தால், அகவிலைப்படி மாதம் ரூ. 8,280 ஆக உயரும். அதன்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ. 720 அதிகரிக்கும்.

அகவிலைப்படி மதிப்பெண்களின் விவரம் எப்படி இருந்துள்ளது? 

7வது ஊதியக் குழுவின் கீழ், தொழிலாளர் பணியகம் 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (தொழில்துறை தொழிலாளர்கள்) எண்களை வெளியிட்டுள்ளது. இதில் ஜனவரி மாதத்தில் குறியீடு வலுவாக இருந்தது. பிப்ரவரியில் சிறிது சரிவு ஏற்பட்டது. ஆனால், பிப்ரவரியில் டிஏ மதிப்பெண் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மீண்டும் குறியீட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. குறியீட்டு எண் 132.7 புள்ளிகளில் இருந்து 133.3 புள்ளிகளாக அதிகரித்தது. இப்போது ஏப்ரல் மாதத்திற்கான குறியீட்டு எண்களும் வந்துள்ளன. இதிலும் ஒரு பெரிய ஏற்றம் காணப்படுகின்றது.

குறியீட்டின் எண்ணிக்கை 134.2 -ஐ எட்டியுள்ளது. அதே சமயம் அகவிலைப்படி மதிப்பெண் 45.04 சதவீதத்தை எட்டியுள்ளது. டிஏ மதிப்பெண் ஜனவரியில் 43.08 சதவீதமாகவும், பிப்ரவரியில் 43.79 சதவீதமாகவும், மார்ச்சில் 44.46 சதவீதமாகவும் இருந்தது. அடுத்து, மே எண்கள் ஜூன் இறுதியில் வெளியிடப்படும். அதாவது ஜூன் 30 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று இந்த எண்கள் அரிவிக்கப்படும். 

மேலும் படிக்க | ஊழியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது, இந்த தேதியில் அகவிலைப்படி உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News