7வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு (central government employees) தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு (central government) அடுத்த மாதம் அகவிலைப்படியை உயர்த்த உள்ள நிலையில், தற்போது அதனுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிக்கப் போகிறது. தற்போது, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA Hike) 42 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனிடையே கூடிய விரைவில் வீட்டு வாடகை கொடுப்பனவை (House rent allowance) அரசாங்கம் அதிகரிக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதற்கான திட்டமிடல் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
வீட்டு வாடகை கொடுப்பனவு எப்போது திருத்தப்படலாம்?
இந்த நிலையில் விரைவில் மோடி அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்க முடியும். இதற்கான அறிவிப்பை, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை திருத்தம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ஜூலை 2021 இல் திருத்தம் செய்யப்பட்டது
இதற்கிடையில் முன்னதாக கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியபோது, அப்போது ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு ஏற்பட்டது. எனவே தற்போது, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வீட்டு வாடகை கொடுப்பனவை திருத்தக்கூடும்.
வீட்டு வாடகை கொடுப்பனவு எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும்
இந்நிலையில் இந்த முறை அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை 3 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது. தற்போது, ஊழியர்களுக்கு 27 சதவீத வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது, 30 சதவீதமாக உயரும். அந்த வகையில் ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும் போது இது 30 சதவீதமாக இருக்கும் என அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிப்பால் மொத்த தொகை எவ்வளவு அதிகரிக்கும்?
7வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 56,900 ரூபாய் ஆகும். அதன் வீட்டு வாடகை கொடுப்பனவு 27 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது.
எளிமையான கணக்கீட்டின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்:
வீட்டு வாடகை கொடுப்பனவு= ரூ 56,900 x 27/100 = ரூ 15,363/மாதம்
30% வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) = ரூ 56,900 x 30/100 = ரூ 17,070/மாதம்
வீட்டு வாடகை கொடுப்பனவில் மொத்த அதிகரிப்பு = ரூ 1,707/மாதம்
ஆண்டு வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிப்பு = ரூ 20,484
பிரிவு வாரியாக வீட்டு வாடகை கொடுப்பனவில் எவ்வளவு ஏற்றம் இருக்கும்?
மெமோராண்டம் படி, அகவிலைப்படி 50 சதவீதம் தாண்டும்போது வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக இருக்கும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு வகை இருக்கிறது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்கள் 27 சதவீதம் வீட்டு வாடகை கொடுப்பனவு பெறுகிறார்கள், இது அகவிலைப்படி 50 சதவீதமானவுடன் என்றால் 30 சதவீதமாக இருக்கும். அதே சமயம், ஒய் வகுப்பினருக்கு, 18 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு, 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.
மேலும் படிக்க | எல்ஐசி-யில் ஆண்களுக்கு மட்டுமே உள்ள சூப்பரான திட்டம்! உடனே அப்ளை பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ