‘லேட்டா வந்தா நடவடிக்கை’: அடெண்டன்ஸ் புதிய விதி.. ஊழியர்களுக்கு அரசு வைத்த ஆப்பு!! விவரம் இதோ

Aadhaar Enabled Biometric System: அரசாங்கத் துறைகள் மற்றும் ஊழியர்களின் மெத்தனப் போக்கை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ள

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2023, 12:15 PM IST
  • பயோமெட்ரிக் இயந்திரங்கள் எப்போதும் செயல்பட வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • துறைத் தலைவர்கள் (எச்.ஓ.டி.) பணியாளர் வருகையை அதாவது அடெண்டன்சை அவ்வப்போது கண்காணித்து, சரியான பணி நேரம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ஊழியர்களின் நடவடிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘லேட்டா வந்தா நடவடிக்கை’: அடெண்டன்ஸ் புதிய விதி.. ஊழியர்களுக்கு அரசு வைத்த ஆப்பு!! விவரம் இதோ title=

Aadhaar Enabled Biometric System: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால், இந்த செய்தியை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். மத்திய அரசின் சார்பில், அனைத்து துறைகளும், தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் சிஸ்டம் (Aadhaar Enabled Biometric System) மூலம் தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் துறைகள் மற்றும் ஊழியர்களின் மெத்தனப் போக்கை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஊழியர்கள், பதிவு செய்தும், பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யாமல் இருப்பது, அரசின் கவனத்துக்கு வந்தது.

ஊழியர்கள் வருகையை பதிவு செய்வதில்லை

வருகைக்கான ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் அமைப்பின் (ABEAS) அமலாக்கத்தின் மதிப்பாய்வின் போது, ​​இந்திய அரசாங்கத்தின் (GOI) அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டது. பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பின்னரும் தங்கள் வருகையை பதிவு (அடெண்டன்ஸ்) செய்யாத ஊழியர்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள், தங்களிடம் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் எந்தவிதமான சாக்குபோக்கும் கூறாமல் ABAAS ஐப் பயன்படுத்தி தங்கள் வருகையை பதிவு செய்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay commission ஊழியர்களுக்கு அட்டகாசமான இரட்டை மகிழ்ச்சி: டிஏ உடன் இதுவும் உயரும்

பயோமெட்ரிக் இயந்திரங்கள் எப்போதும் இயக்கத்தில் இருக்க வேண்டும்

பயோமெட்ரிக் இயந்திரங்கள் எப்போதும் செயல்பட வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், துறைத் தலைவர்கள் (எச்.ஓ.டி.) பணியாளர் வருகையை அதாவது அடெண்டன்சை அவ்வப்போது கண்காணித்து, சரியான பணி நேரம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பணியாளர்கள் சரியான வேலை நேரத்தை கடைபிடிப்பதையும், தாமதமாக வருவதை தவிர்ப்பதையும் கண்காணித்து பணியாளர்களை கவனித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'தாமதமாக வருவதையும், அலுவலக நேரம் முடியும் மும் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கும் ஊழியர்களின் நடவடிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய ஊழியர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி ஊழியர்களைப் பொறுத்தவரை, குறைந்த உயரத்தில் அல்லது அவர்களின் மேசைகளில் எளிதில் அணுகக்கூடிய இயந்திரங்களைத் துறை வழங்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது AEBAS இல் வருகைப் பதிவு நீண்ட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. பிப்ரவரி 15, 2022 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பயோமெட்ரிக் வருகை இடைநிறுத்தப்படும் என்று பணியாளர் அமைச்சகம் ஒரு உத்தரவின் மூலம் தெரிவித்திருந்தது. இதற்குப் பிறகு, பிப்ரவரி 16, 2022 முதல், AEBAS மூலம் மீண்டும் வருகைக் குறியிடல் தொடங்கியது.

கூடுதல் தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டது. இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், பின்னர் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடலாம். இது மட்டுமின்றி, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி கிடைக்காத நிலையும் ஏற்படக்கூடும். 

பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். வரும் காலங்களில், பல்வேறு மாநில அரசுகளும் இந்த விதியை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | என்னது ஒரு ரயிலையே முன்பதிவு செய்யலாமா... அது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News